Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2022 08:57:03 Hours

இந்திய இராணுவத் தளபதி இலங்கை இராணுவப் படையினர் மற்றும் குடும்பங்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவிப்பு

இலங்கையின் 74 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கையின் இராணுவ தளபதி உட்பட அனைத்து படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்து செய்திகளை தனது டுவிட்டர் பகுதியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய இராணுவ படையினர்களின் குழு புகைப்படத்தை ஏந்தியவாறு வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் நிலவும் நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.