Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2022 15:30:52 Hours

வெகுவிமர்சையாக இடம்பெற்ற 74 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

“சவால்களை வெற்றிகொண்ட சுபீட்சமான நாளை - வளமான தாய்நாடு”எனும் தொனிப்பொருளில் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. கௌரவ பிரதமர் மற்றும் பல மத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சக, பாதுகாப்பு, அரச மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அழைப்புவிடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் மூலம் இலங்கையின் செழிப்பு, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நீண்ட கால ஸ்திரத் தன்மையினை பிரதிபலிக்கும் வகையிலான அனைத்து இலங்கையர்களின் முனோக்கிய நகர்வினை எடுத்துக்காட்டுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷவுடன் வருகை தந்ததை தொடர்ந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது துணைவியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷவும் அங்கு சென்றடைந்த சில நொடிகளின் பின்னர் அன்றைய நிகழ்ச்சி ஆரம்பமானது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன சபாநாயகர், பிரதம நீதியரசர், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், மேல் மாகாண ஆளுநர், மேல் மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், இராஜதந்திரிகள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் இன்று காலை (4) 07. 56 மணியளவில் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

கொவிட் 19 இன் சுகாதார அபாயங்களுக்கு மத்தியில் தேசத்திற்கு பல்வேறு சவால்கள் ஏற்பட்டும் இந்த வருட நிகழ்வு எளிமையான, சுருக்கமான மற்றும் வண்ணமயமான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டதுடன் இது நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரு முக்கிய அடையாளமாக காணப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாட்டின் முதல் பெண்மணி ஆகியோரை பிரதமர் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அன்புடன் வரவேற்றனர் மற்றும் . இவரது வருகையை இராணுவ பொலிஸ் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் குழல் ஊதி வண்ணமயமாக்கினர்.

அதன் பின்னர் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா , கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரினால் அதிமேதகு ஜனாதிபதியவர்கள் தேசிய கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அவர்களினால் தேசிய கொடி ஏற்றிவைக்கும் வேளை 'மகுல்பேரா' (சுப மேளம்) தாள முழக்கங்களுக்கு மத்தியில், மாகாணத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 45 பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதத்தை பாடி அனைத்து தேசபக்தி உள்ளங்களிலும் சுதந்திர தேசம் வயது முதிர்ந்த நாடு என்ற ஒப்பிடமுடியாத மற்றும் கலாச்சார நெறிமுறைகளுடன் பெருமையை நிரப்பினர்.

அதனைத் தொடர்ந்து, விசேட மேடையில் இருந்து ஜனாதிபதி அவர்கள், பெண்கள் குழுவினால் வழங்கப்பட்ட ஜயமங்கள கீதம் மற்றும் தேவோ வஸ்சது கெலன பாடல்களின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார் அத்துடன் நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களின் உயிர்களை நீத்த படை வீர்ர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி இந்த நிகழ்வில் செலுத்தப்பட்டது. அன்றைய நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாக வர்ணமயமான முப்படைகளின் கௌரவ பாதுகாப்பு அணிவகுப்பு முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு இலங்கையினால் வழங்கப்பட்ட வழமையான 21- பீரங்கி வேட்டுக்கள் முழக்கத்துடன் இலங்கை இராணுவ பீராங்கி படையணினால் வணக்கம் செழுத்தப்பட்டது. தொடரந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை இடம் பெற்றது.

(செய்தி சிறப்பம்சங்களில் ஜனாதிபதியின் உரையைப் பார்க்கவும்).

அவரது உரைக்குப் பிறகு, முப்படை அதிகாரிகள் மற்றும் படையினர், காவல்துறை, பொலிஸ் விஷேட அதிரடி படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள் , தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற மற்றும் இன்னும் சேவையில் உள்ள உடல் ஊனமுற்ற போர்வீரர்கள் ஆகியோர் அடங்கிய இந்த நேர்த்தியன அணிவகுப்பு இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் அணிவகுப்புத் தளபதியினால் பிரதம அதிதிக்கு இராணுவ மரபுகளுக்கு ஏற்ப மரியாதை செலுத்தப்பட்டது.

பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடி படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 6500 படையினர் தங்கள் சம்பிரதாய ஆடைகளை அணிந்து அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர். மேலும், பாடசாலை மாணவர்கள் மற்றும் தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் உறுப்பினர்களும் இணைந்து அணிவகுப்பின் முக்கிய பகுதியை வண்ணமயமாக்கினர்.

431 பிரபல கலைஞர்கள், கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் தங்களது கலாசார மற்றும் கலைத்திறன்கள் ,அந்தந்த மாகாணங்களில் கலாச்சார பன்முகத்தன்மைகளை வெளிப்படுத்தும் நிகழ்வு அணிவகுப்புக்கு முக்கிய அம்சமாக திகழ்ந்தது. சுகாதார பாதுகாப்பு காரணங்களால், குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே தேசிய சுதந்திர தின நிகழ்ச்சிகளை நேரலையில் பார்வையிட்டனர். ஆனால் அனைத்து தொலைக்காட்சி நிலையங்களும் நாட்டின் அனைத்து மூலைகளிலும் தங்கள் நேரடி ஒளிபரப்புகளை ஒளிபரப்பின. நன்பகல் 12.00 மணியளவில் இலங்கை கடற்படையினர் சைத்யா வீதியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு அருகில் 25 சுற்று துப்பாக்கி வேட்டுக்களை முழங்கவைத்து தேசத்திற்கு வணக்கம் செலுத்தினர்.

அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை ஒட்டி கௌரவ கொழும்பு மேயர் திருமதி ரோசி சேனாநாயக்க பிரதான வைபவத்திற்கு முன்னதாக ‘தேசத்தின் தந்தை’ என்று அங்கீகரிக்கப்பட்டும் சுதந்திர சதுக்கத்தில் உள்ள கௌரவ டி.எஸ்.சேனாநாயக்க அவர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடர் நிகழ்வுகள் வியாழக்கிழமை (3) கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் இரவு 'பிரித்' பிராயணம் நிகழ்வுடன் ஆரம்பமானது, அதனைத் தொடர்ந்து மறுநாள் காலை ஹீல் தானமும் இடம்பெற்றது.

சுதந்திர தினத்தன்று (4) பௌத்த மத அனுஷ்டானங்கள், இந்து மத சடங்குகள், இஸ்லாமிய பிரார்த்தனைகள், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகள் கொழும்பில் அந்தந்த புனித இடங்களில் இடம்பெற்றன.