Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2022 21:09:58 Hours

உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்கள் தேசிய சுதந்திர தின ஒத்திகை நிகழ்வினை மீளாய்வு

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பி.டபிள்யூ.பி ஜயசுந்தர (ஓய்வு) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள், 2022 பெப்ரவரி 4 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 74 வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகைகளை மீளாய்வு செய்து அதன் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் முகமாக இன்று (1) திகதி காலை கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா கடற்படைத் தளபதி , விமானப்படைத் தளபதி மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து அங்கு இடம்பெற்றுவரும் முக்கியமான இடங்கள், மேடைகள், நகரும் இடங்கள், அணிவகுப்பு பாதை, நேரம் ,சுகாதார ஏற்பாடுகள் மற்றும் இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்ததுடன் அது தொடர்பாக உறிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும் குறித்த மீளாய்வு நடவடக்கையின் போது சுகாதார இடைவெளிகளை கடைப்பிடித்து அணிவகுப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடிய தளபதி தேவையான இடங்களில் அவசியமான ஏற்பாடுகளை செய்யுமாறும் விழாவை ஏற்பாடு செய்யும் அனைத்து பங்குதாரர்களுடன் தெரிவித்ததுடன் அவர்களுடன் தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

இலங்கையின் 74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், ஆலோசகர்கள், செயலாளர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் , மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சுதந்திர சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை (4) காலை நடைபெறவுள்ளது.

“சவால்களை வெற்றிகொண்ட சுபீட்சமான நாளைய வளமான தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 74 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் 6500 முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் விசேட பொலிஸ் படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினர், ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் போர்வீரர்கள் மற்றும் தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் இராணுவ மற்றும் கலாச்சார நிகழ்வுகளை சிறப்பிக்கும் முகமாக 45 மாணவர்களும், 431 கலாச்சார கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.