30th January 2022 23:00:28 Hours
74 வது தேசிய சுதந்திர தின ஒத்திகை நிகழ்வில் கலந்து கொள்ளும் முப்படையினர் மற்றும் ஏனையவர்களின் நலன்கருதி இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் மென்பான பக்கெட்டுக்கள் விநியோகிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29 ஆம் திகதி தொடக்கம் சுதந்திர தின ஒத்திகை நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்கள் உட்பட அனைவருக்குமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டமானது இராணுவ அணிவகுப்பின் இறுதி நாள் வரை தொடரும்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின் ஆலோசனையின் பேரில், வரையறுக்கப்பட்ட தனியார் சன்குயிக் லங்கா நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பியோ டேல் நிறுவனம் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
திங்கட்கிழமை (31) காலை, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், அணிவகுப்பில் பங்குபற்றிய படையினருக்கு ஒரு தொகை சிற்றூண்டிப் பொதிகளை விநியோகித்தார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் துஷார பாலசூரிய உட்பட சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்