30th January 2022 22:39:09 Hours
ஞாயிற்றுக்கிழமை (30) இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி தலைமையகத்தில் லெபனான் நோக்கிச் சென்ற இலங்கைப் படையினரின் சம்பிரதாய அணிவகுப்பு நிறைவடைந்த சில நிமிடங்களில், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியிமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பனாகொட இராணுவ முகாம் வளாகத்திற்கு திடீர் ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
படையினருக்கு உயர்தரம் மற்றும் போஷாக்கான சிறந்த உணவுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில், இராணுவத் தளபதி முதலாவது இலங்கை போர்க்கருவி படையணிக்கு விஜயம் செய்து, சிப்பாய்களின் உணவறையில் பிரதான சமையற்காரர் உட்பட பிரிவில் உள்ள ஏனைய சிப்பாய்களின் கஷ்டங்களை உன்னிப்பாக அவதானித்தார். சமைக்கப்பட்ட உணவு வகைகளின் தரம் மற்றும் தரத்திற்காக அந்த கறிகளில் சிலவற்றை சுவை பார்த்தார்.
தேசத்தின் நலனுக்காக 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும், சிறந்த சுகாதாரமான முறைகளைப் பயன்படுத்தி சமைத்து, தரமான மற்றும் சரியான முறையில் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் கூடிய கண்ணியமான உணவை வழங்க வேண்டும் என்று இராணுவத் தளபதி கூறினார்.
அதேபோல், முதலாவது போர்க்கருவி படையணியின் வளாகத்தில் உள்ள சிப்பாய்களின் தங்குமிட வசதிகளைப் பார்வையிடுவதற்கு முன், சிப்பாய்களின் சமயலறையில் உணவுகள் தயாரித்தல், தங்குமிட வசதிகள் மற்றும் திறன்கள் குறித்து சமையல்காரர்களுடன் கலந்துரையாடினார்.
இலங்கை போர்க்கருவி படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் அஜித் முனசிங்க, உட்பட சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.