30th January 2022 06:22:43 Hours
பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிலும் இருந்து வருகை தந்த 1000க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் ஏற்பாடுசெய்யப்பட்ட முழு நாள் “ஜயபிரித்” ஆசிர்வாத பூஜை நிகழ்வு இன்று (26) மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது நாட்டிலிருக்கு தீய சக்திகளை அகற்றி செழிப்பு கிட்ட வேண்டுமென்றும் நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு கிட்ட ஆசி வேண்டியும் பௌத்த சமயத்தின் சக்திமிக்க மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார், அவர்களுடன் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு)கமால் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், கடற்படை மற்றும் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவியர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களினால் பாரம்பரிய முறைக்கமைய பூஜைப்பான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதயைடுத்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வரலாற்று சிறப்பு மிக்க “பிருவனா புத்தகம்” ஏந்திச் செல்லப்பட்டதை தொடர்ந்து எண்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்த பிரித் மண்டபத்திலிருந்த பிக்குகளுக்கு வெற்றிலை தட்டு “தெஹெத் வட்டிய” வழங்கி ஆசிவேண்டும் நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனையடுத்து வண. பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், வெந்தருவே உபாலி தேரர் மற்றும் வண. கலாநிதி நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் 'அனுஷாசனா' (சொற்பொழிவு) நிகழ்த்தப்பட்டது.
2008 ஆம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கையின் தற்போதைய கௌரவ பிரதமரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய 2008 ஆம் ஆண்டில் மேற்கண்டவாறான ஆசிர்வாத பூஜைகள் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மடுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரின் பங்கேற்புடன், உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, போரில் உயிர் நீத்த வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்களின் குடும்ப அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது முப்படையினருக்கும் ஆசி வேண்டி பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக விளங்கும் சவால்கள் மற்றும் பின்னடைவுகளை தவிர்த்து நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆசி வேண்டிய பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சினால் வியாழக்கிழமை (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி வருடாந்த நிகழ்வு, மகா சங்கத்தினருக்கு “ஹீல் தான” அன்னதானம் வழங்கும் நிகழ்வுடன் நிறைவை எட்டியது.