27th January 2022 12:13:09 Hours
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு ஹிடேக்கி மிசுகோஷி புதன்கிழமை (26) ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஷவேந்திர சில்வா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
தளபதி அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் கடந்த எழுபது ஆண்டுகளாக நீடிக்கும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அதன் பெருமிதம் என்பவற்றோடு, இரு நாட்டு மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த தன்மைகள் மற்றும் பொதுவான அபிலாஷைகளையும் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளில் இலங்கை இராணுத்தின் பங்களிப்பு , நாட்டின் பல்வேறு தேசிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சேதன பசளை உற்பத்தி திட்டம் உள்ளிட்ட விடயங்களில் அர்பணிப்புடன் கூடிய இராணுவத்தின் வகிபாகம் தொடர்பில் தூதுவர் பாராட்டு தெரிவித்தார். ஜப்பானின் வரலாற்று பாரம்பரியங்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நற்புறவுகளை பிரதிபலிக்கும் வகையிலான இருதரப்பு உதவிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அதிகாரிகளுடன் ஜப்பான் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபடும் என்றும் அவர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் தெரிவித்தார்.
இதன் போது நெருக்கடிகள் மிகுந்த காலங்களில் ஜப்பான் வழங்கிய அம்புலன்ஸ்கள், நிவாரண உதவிகள் , தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உதவிகளை நினைவுகூர்ந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அதற்காக நன்றி கூறியதோடு ஜப்பான் நாட்டுடனான உண்மையான நட்புறவு என்றும் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
இச் சந்திப்பின் நிறைவில் இருவரும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களைப் பகிர்ந்து கொண்டனர். இராணுவ தளபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் ஜப்பானிய அமைச்சர்/ துணைத் தலைவர் திரு. கட்சுகி கோட்டாரோ, பாதுகாப்பு/ பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் புகுரா காகு மற்றும் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இராணுவத் தலைமையக வளாகத்திற்கு தூதுவர் வருகை தந்ததும், இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரயினால் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கும் வரவேற்பளிக்கப்பட்டதோடு, அவர்கள் இராணுவ தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.