Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd January 2022 11:41:19 Hours

22 வது கஜபா படையணியின் நலன்புரித் திட்டம் நனவாகியது

சாலியபுரவில் உள்ள 22வது கஜபா படையணியினரால் பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட விடுமுறை விடுதியான த வெண்டி டூ பங்களா 'The Wenty two Bungalow' சனிக்கிழமை (22) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கஜபா படையின் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, 22 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீஎஸ்கே ஜயசுந்தர மற்றும் கஜபா படையணியின் நிலையத் தளபதி கேணல் ஷிரந்த மில்லகல ஆகியோர் கஜபா படையணியின் நுழைவு வளாகத்தில் இராணுவ தளபதிக்கு வரவேற்பளித்தனர்.

அதனையடுத்து சுப வேளையில், இராணுவ தளபதியவர்களினால் புதிய விடுமுறை விடுதி நடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதோடு, நினைவுப் படிகமும் திறந்து வைக்கப்பட்டது. இரு மாடிகளை கொண்ட மேற்படி நவீன அமைப்பிலான விடுமுறை விடுதியின் நிர்மாண பணிகள் 22 வது கஜபா படையணி கட்டளை அதிகாரியின் கீழ் படையணியின் ஆளணி வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.

படையணியின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விடுமுறை விடுதியானது படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு, , ‘முன்னநகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025’ இற்கு அமைவாக கஜபா படையணி நிலையத் தளபதியின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது பிரதம விருந்தினர் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து புதிய கட்டிடத்தை பார்வையிட்டதன் பின்னர் நிர்மாண பணிகளை மேற்கொண்ட 22 வது கஜபா படையணி படையினருடன் கலந்துரையாடி பின்னர் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.