23rd January 2022 07:07:05 Hours
இராணுவப் புலனாய்வுப் படையின் 29 வது ஆண்டு பூர்த்தி நிகழ்விற்கு இணையாக மேற்கொள்ளப்பட்ட போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து புலனாய்வு படையணியின் சேவை வனிதையரால், அம்பலாங்கொட கரந்தெனியவில் உள்ள புலனாய்வு படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (21) இணை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியான திருமதி மனோரி சலே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அதற்கமைய வருகை தந்த பிரதம விருந்தினருக்கு திருமதி சலே அவர்களினால் மலர்கொத்து வழங்கி வரவேற்பளிக்கப்பட்டததோடு பிரதம விருந்தினர் நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் அழைப்பித்துச் செல்லப்பட்டார். இதன்போது புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் வகிபாகம் தொடர்பில் பிரதம விருந்தினரை தெளிவூட்டும் விதமாக, புலனாய்வு படையினால் நிறைவு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய காணொலியொன்றும் ஒளிபரப்பட்டது.
அதனையடுத்து புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட சின்னங்கள் எண்ணெய் வகைகள் மற்றும் கருவாப்பட்டை சார்ந்த பொருட்கள் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டதோடு அவற்றை பார்வையிடுவதற்காக பிரதம அதிதியவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது திருமதி சலே அவர்களுடன் கண்காட்சிப் பொருட்களை பார்வையிட்ட திருமதி சுஜீவா நெல்சன் சேவை வனிதையர் பிரிவின் உற்பத்தி முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அதனையடுத்து புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் நிகழ்வின் நினைவம்சமாக குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் பங்கேற்றார்.