Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2022 06:40:14 Hours

மறுசீரமைக்கப்பட்ட கூரகல விகாரைக்கு இராணுவ தளபதியிடமிருந்து நன்கொடை

வரலாற்று சிறப்பு மிக்க தொல்லியல் சின்னமாக விளங்கும் கல்தோட்டை பலாங்கொடையிலுள்ள கூரகல ராஜ மகா விகாரை பல காலமாக ஆக்கிரமிக்குக்கு இலக்காகி காணப்பட்டதோடு, புறக்கணிக்கப்பட்ட நிலையில் பாழடைந்து காணப்பட்ட நிலையில் அதன் புராதான பெருமிதத்தை மீட்டெடுக்கும் வகையில் நெல்லிகல பௌத்த நிலையத்தின் ஸ்தாபகரும் கூரகல விகாரையின் விகாராதிபதியுமான வண. வத்துரகும்புரே தம்மரதன தேரர் மற்றும் பாதுகாப்பு படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் இன்று (16) மாலை கூரகல விகாரை மறுசீரமைக்கப்பட்டது.

பலாங்கொடை ஹோமோ சேபியன்ஸின் வரலாற்றுக்கு முந்திய காலப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தொல்பொருள் மதிப்புடைய பௌத்த சமயத் தலமான கூரகல விகாரையின் மறுசீரமைப்பு பணிகள் நெல்லிகல பௌத்த நிலையத்தின் ஸ்தாபகரும் கூரகல விகாரையின் விகாராதிபதியுமான வண. வத்துகும்புரே தம்மரத்த தேரரினால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் 8 மாதங்களுக்கு முன்பாக விடுத்திருந்த கோரிக்கையின் பலனாக இராணுவத்தின் ஆளணி வளத்தை பயன்படுத்தி இந்த விகாரையின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே, சனிக்கிழமை (15) 500 பிக்குகளின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை சம்பிரதாயபூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான 150 பேர் அடங்கிய இராணுவத்தின் ஆளணி கொண்டு வளத்தை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது, நூற்றுக்கணக்கான வாத்திய இசைக்குழு உறுப்பினர்களால் தாள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதோடு, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பாரியாருடன் இணைந்து தூபியின் மேலடுக்கு பகுதியில் காணிக்கை பொருட்களை சாற்றினார். இதன்போது தூபிக்கு விமானப் படையின் ஹெலிகொப்டர்களிலிருந்து மலர்கள் தூவப்பட்டமையும் சிறம்பம்சமாகும்.

அதனையடுத்து, அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதனாபிதான மகா நாயக்க தேரர், இலங்கை ராமக்ஞ மகா பீடத்தின் பீடாதிபதி அதி வண. மகுலேவே விமல நாயக்க தேரர், அமரபுர பீடத்தின் பீடாதிபதி தொடம்பஹல சந்திரசிறி மஹா நாயக்க தேரர், மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மாதஸ்ஸி தேரர் மற்றும் ரங்கிரி தம்புள்ளை விகாரையின் நாயக்க தேரர் வண இனாமலுவே சுமங்ள தேரர் ஆகியோரின் பங்கேற்புடன் 'தஹம் ஹமுவ' நிகழ்வு நிகழ்தப்பட்டது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ டிக்கிரி கொப்பேகடுவ, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அகில எல்லாவல, பேராசிரியர் கபில குணவர்தன, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் செயலாளர் திருமதி மாலனி லொகுபோதகம, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் திரு. தேல பண்டார, தியவடன நிலமே மற்றும் இராணுவ சேவா வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மகா சங்கத்தின் சார்பில் நெல்லிகல பௌத்த நிலையத்தின் ஸ்தாபகரும் கூரகல விகாரையின் விகாராதிபதியுமான வண வத்துரகும்பும்ரே தம்மரத்த தேரரினால் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவின் சொற்பொழிவில் நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் இந்த புனித வளாகத்தின் முக்கியத்துவம் என்பன தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதோடு, கிறிஸ்துவிற்கு முற்பட்ட கால வரலாற்றை கொண்ட இந்த விகாரையில் வெளிநாடுகளிலிருந்த வந்த சில பிக்குகள் ஆதிக்கம் செலுத்தியிருந்ததாக கூறப்படும் வரலாற்று அம்சங்கள் தொடர்பிலும் கருத்துரைத்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ ஆகியோரும் விகாரையில் புனித அம்சங்களை புனித பொருட்களை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாக வழிபாட்டு சின்னங்களை அடையாளபூர்வமாக பிரதிஷ்டை செய்தனர்.

'தஹம் ஹமுவ' நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாழடைந்து காணப்பட்ட இப்புனித தலம் நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் பௌத்தர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருவதோடு, வண.வத்துரகும்புரே தம்மரதன தேரரின் கீழ் வழிநடத்தப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோர் இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்கியமை சமயத்தின் மீதான அர்பணிப்பான செயற்பாடுகளை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளதென தெரிவித்த அவர், தேசிய வெசாக் தின நிகழ்வுகளை இத்தலத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு இராணுவத்தின் முழுமையான ஆதரவு கிட்டும் என தெரிவித்த தளபதியவர்கள் அனைவரும் அந்த நிகழ்விற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.