Header

Sri Lanka Army

Defenders of the Nation

13th January 2022 15:30:01 Hours

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தினால் இடைநிலை அதிகாரிகளுக்கான கருத்தரங்கு ஆரம்பம்

"சமகால உலகில் இராணுவத் தலைமைத்துவம்: போர்வீரனாகவிருந்து நண்பனாக பரிணாமம்" என்ற தொனிப்பொருளில் பிரதானி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்படை அதிகாரிகளுக்கான முழு நாள் கருத்தரங்கத்தின் அமர்வுகள் இன்று (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்தக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகின.

மேற்படி இடைநிலை ‘அதிகாரிகள் தலைமைத்துவ மாநாடானது’ (AFMOLS-2021) அதிகாரிகளின் தலைமைத்துவ பண்புகள் மற்றும் பன்முகத் தன்மை சார்ந்த சிந்தனை திறனை மேம்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனால் ஒரு அதிகாரியானவர் எவற்றை செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்ற தீர்மானத்தை எடுக்கூடியவராக உருவாக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் தலைமைத்துவ பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் போது அவற்றுக்கான அவற்றை திறம்பட நிறைவேற்றுவதற்கும் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாய நடப்பதற்கும் உதவும். இந்த கருத்தரங்கில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட இடைநிலை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பினை ஏற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமால் குணரத்ன அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப உரையை நிகழ்த்தினார். இதன்போது நிகழ்வின் ஆரம்ப கட்டமாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி அவர்களுடன் இணைந்து கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. பின்னர் போரில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூறுவதற்கான இரு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து கருந்தரங்கின் நோக்கம் தொடர்பிலான காணொளி மூலமான ஆவண தொகுப்பொன்றும் ஔிபரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. குறித்த உரையில், கொள்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம், ஆயுதப் படைகள் அவசியமான செயல்பாட்டுத் திறன்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும் கூட்டுப் பயிற்சியின் முக்கியத்துவம் என்பன தொடர்பில் எடுத்துரைத்தார். அதற்கமைய "பல நெருக்கடியான சூழல்களுக்கு மத்தியிலும் நமது நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளிலுக்கு பங்களிப்பு செய்வதில் ஆயுதப் படைகள் எப்போதும் முன்னணியில் உள்ளன. இதனை நிரூபிக்கும் வகையில் நாடு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சகல சந்தர்ப்பங்களிலும் படையினருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. எவ்வேளையிலும் சவாலின் தன்மையைப் பொருட்படுத்தாமல் சகல நிலைகயிலும் திறமையான மற்றும் நம்பகமான தளபதிகளுடன் படைகளை தயார் நிலையில் வைத்திருத்தல், தேசிய பாதுகாப்பை நிலையாக பேணுதல் என்பவை தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

"நவீன பாதுகாப்பு சூழலில் சிக்கலான நிலைமைகளில் செயற்படும் திறன் கொண்ட தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பகுப்பாய்வு மற்றும் விவாத திறன், கூட்டிணைவு செயற்பாடுகள், கற்றல், வழிகாட்டல்கள், ஆய்வுகள், புத்தாக்கங்கள் தொடர்பிலான புதிய பயிற்சி திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்.

அதனால், அவர்கள் சிந்தனை திறன், சிறந்த முடிவுகளை எடுத்தல் மற்றும் சிவில் சமூகத்துடன் அவசியமான ஒத்துழைப்பை பேணுதல், தம்மை தாமே வடிவமைத்தல் ஆகியவற்றுக்கான பண்புகளை வளர்த்துகொள்ளல் மற்றும் தரமான தீர்மானங்களை எடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலான விடயங்கள் தொடர்ல் கவனம் செலுத்தப்பட்டது. சமகால தேவைகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதற்கு உகந்த வகையில் மத்திய தர நிலை அதிகாரிகளை உருவாக்குவதற்காக தொழில்சார் இராணுவ அறிவை மேம்படுத்தல் மற்றும் தந்திரோபாய செயற்பாடுகள் தொடர்பிலான செயற்பாடுகளின் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல் கடமைகளை நிறைவேற்றளின் போதான நிபுணத்துவம் என்பன தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

நவீனகால இராணு அதிகாரியொருவர் தனது பணிகளை செய்யும் போது, பணிக்கும் அப்பால் சென்று, தனது முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காகவே மேற்படி கருத்தரங்கு நடத்தப்படுவதாகவும், அந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தினால் 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அதிகாரிகளை வடிவமைக்கும் நோக்கம் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களது தெரிவுகளை அவர்களது தெரிவுகளை பரிமாறிக் கொள்வதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. பல வருட காலாமாக உலகின் பாதுகாப்பு கட்டமைப்பு மாற்றம் கண்ட வண்ணமே இருக்கும் நிலையில் உலக அளவிலாள சிக்கல்கள் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு நிலைமையும் மாற்றம் கண்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதனால் எதிர் தரப்புக்களின் பலத்தையும் நமது தோல்விக்கான சாத்தியக்கூறுகளையும் மாத்திரம் நம்பிக் கொண்டிருக்காமல் மாற்றங்கள் தொடர்பில் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

"எதிர்கால செயற்பாடுகளும் திடீரென மாற்றம் அடையக்கூடிய வகையில் அமைந்திருப்பதால் அதற்கு தகுந்த வகையில் படைகளின் செயற்பாடுகளையும் மாற்றம் செய்வது அவசியமாகும். அதேநேரம் போர் வீரனாக மாத்திரமின்றி மனிதாபிமான அடிப்படையில் சிவில் தரப்புக்கள், சட்டம் வகுப்பவர்கள் மற்றும் அமைச்சுக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜெனரல் ஷவேந்திர சில்வா எடுத்துரைத்தார்.

இக் கருத்தரங்கில் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் நிகழ்த்திய ஆரம்ப உரையின் போது, சிறப்பான முறையில் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்தமைக்காக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் கருத்தரங்களின் மூன்று கட்ட அமர்வுகள் அதன் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், அதனால் இடைநிலை அதிகாரிகளை ஊக்குவித்து அவர்களை எதிர்கால தலைவர்களாக உருவாக்க முடியும் என்றும் மேற்படி அதிகாரிகளின் தெரிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர்களை எதிர்கால தலைமைத்துவங்ளாக உருவாக்குவதற்கு அவசியமான தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கும் என்றும் தெரிவித்தார். கருத்தரங்களில் பங்குபற்றிய முப்படைகளின் இடைநிலை அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அவர்களின் தனித்துவமான இராணுவ வாழ்க்கைக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிறப்புரையின் நிறைவில் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் பிரதம அதிதியான (ஓய்வு) ஜெனரல் கமால் குணரத்ன அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனையடுத்து இருவரும் விருந்தினர் பதிவேட்டி எண்ணங்களை பதிவிட்ட பின்னர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதன் பின்னர் ஆரம்ப அமர்வு நிறைவு கண்டது.

இன்றைய மத்திய தர நிலை அதிகாரிகளுக்கான தலைமைத்துவ கருத்தரங்கு "தற்கால உலகில் இராணுவத் தலைமைத்துவம், போர் வீரனாகவிருந்து நண்பராக பரிமாற்றமடைதல், தேசிய பாதுகாப்பில் இராணுவத்தின் பாரம்பரிய பங்களிப்பு ஆகிய முக்கிய அம்சங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. மேலும் பணிகளை மீளாய்வு செய்தல், இராணுவ தலைமைத்துவத்தின் பரிணாமம், உலகின் நடைமுறை பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு அமைய தீர்மானங்களை எடுத்தல், இராணுவ தலைமைத்துவச் செயற்பாடுகளை மேம்படுத்தல், இராணு தலைமைத்துவத்தின் நடைமுறைச் செயற்பாடுகளுக்கான பங்களிப்புக்களை வலுப்படுத்தல், இலங்கை சமூகத்தின் விருப்பதிற்கமைவான தலைமைத்துவம், இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்கள், இளம் இராணுவ அதிகாரிகளின் பங்களிப்பு, மனப்பாங்கு, தொழில்முறை அடிப்படையிலான அணுகுமுறை, சமுதாயத்தில் இராணுவத்தின் விம்பத்தை சீராக்குவதற்கான சவால்கள் என்பன தொடர்பில் அறிவுறுத்தப்பட்டன.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பீடத்தின் மூலோபாய கற்கைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சனத் டி சில்வா, இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானி ரியர் அத்மிரால் வைஎன் ஜயரத்ன, பாதுகாப்பு ஆய்வாளர் நிலந்தன் நிருதன், வட மாகாண முன்னாள் ஆளுநர் எசஎம்சீஎஸ் பலிஹக்கார, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீட சர்வதேச அலுவல்கள் பிரிவின் தலைவர் கலாநிதி திருமதி மனிஷா வணசிங்க பாஸ்குவேல்,அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டீஎஸ் சாலே, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் மூலோபாய ஆய்வுகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஹரிந்த விதாரன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீட சர்வதேச அலுவல்கள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜோஜ் குக் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சின் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான (ஓய்வு) ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் நிறைவில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்ட பின்னர் நிகழ்வில் பங்கேற்ற அறிஞர்களுக்கும் அடையாளபூர்வமாக நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தேவைகளை பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதற்காக இராணுவ தலைமைத்துவ தெரிவுகளை மேம்படுத்தும் நோக்கில் சமகால உலகின் ஒவ்வொரு துறைகள் தொடர்பிலுமான தெரிவுகளை முப்படைகளினதும் மத்திய தர நிலை அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுப்பதே கருத்தரங்கின் நோக்கமாக அமைந்திருந்ததோடு, உபாய மார்க்கமாக கட்டளையிடும் அதிகாரிகள் தங்களது கடமைகளை நிறைவேற்றும் போது மேற்படி தெரிவுகள் அவசியமானதாக அமையும். இந்த அமர்வுகள் நிர்வாகிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடனான ஆலோசனைகளை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.