Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 11:30:29 Hours

சுதந்திபுரம் கொலணி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 681 வது பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பில் நத்தார் தினத்தன்று (25) சுதந்திபுரம் கொலனி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.

68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டாரவின் வேண்டுகோளுக்கு இணங்க, நன்கொடையாளர் திரு டப்ளியுஎம்சியு பத்பெரிய என்பவர் குறுத்த குடும்பங்களின் பொருளாதாரக் கஷ்டங்களைக் கருத்தில் கொண்டு கல்வி உதவிகளுக்காக நிதியுதவி செய்யதார்.

நன்கொடை நிகழ்ச்சியானது 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் ஹெட்டியாராச்சி, 9 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.சி.டி.டி. குமார, 6 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.எம்.ஆர்.ஹென்னிநாயக்க மற்றும் அதிகாரிகள் இந்த விநியோக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.