Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 11:40:29 Hours

கிறிஸ்மஸ் பரிசுகளாக உலர் உணவுப் பொதிகள்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் ற் 642 வது பிரிகேடின் 17 வது (தொ) கஜபா படையணியின் படையினர், நத்தார் தினதன்று (25) பழம்பாசி மெதடிஸ்த தேவாலய வளாகத்தில், கிறிஸ்மஸ் தின ஆராதனைக்கு முன்பு உலர் உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்கியதுடன், சிரமதானப் பணியினையும் முன்னெடுத்தனர்.

கிறிஸ்மஸ் தினத்தன்று தலா 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் அப்பகுதியிலுள்ள 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதுடன், அதே நேரத்தில் கிறிஸ்மஸ் தாத்தாவினால் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

642 வது பிரிகேட் தளபதி கேணல் மதங்க அல்விஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 17 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரியினால் தனது படையினருடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.