Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 11:50:29 Hours

இராணுவ கோப்ரல் வில்வித்தையில் தேசிய வெற்றி

தேசிய வில்வித்தை சம்பியன்ஷிப் போட்டி - 2021, டிசம்பர் 21-23 திகதிகளில் கோட்டை இசுரு தேவப்பிரிய மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் 8 அணிகள் பங்குபற்றியதுடன் இராணுவ வில்வித்தை வீரர்கள் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

4 முறைகள் கொண்ட சுற்றுக்கள் மற்றும் 70 M அணி (மூன்று) பிரிவுகளில் இராணுவ வில்லாளர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர். இந்த போட்டிக்கு கூட்டு அணி நிகழ்வுகள் அனைத்தும் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

வில்வித்தை வீரரான கோப்ரல் ஏ.ஏ.எஸ்.வசந்த குமார இப்போட்டியில் தேசிய வெற்றியை தன்வசமாக்கி கொண்டு சம்பியன்ஷிப்பிற்கான கிண்ணத்தினையும் பெற்றுக் கொண்டார்.

70 மீற்றர் அணியில் கோப்ரல் பி.ஏ.என் வசந்தகுமார தங்கப் பதக்கம் வென்றார்.

70 மீற்றர் அணியில் கோப்ரல் எம்ஏஏ தங்கப் பதக்கம் வென்றார்.

70 மீற்றர் அணியில் சிப்பாய் எச்ஏஎஸ்எல் விஜேசிறி தங்கப் பதக்கம் வென்றார்.

கோப்ரல் ஏ.ஏ.எஸ்.வசந்தகுமார ,

கோப்ரல் யுடிஎகே குலதுங்க ,

லான்ஸ் கோப்ரல் எம்.டி கலப்பத்தி ஆகியோர் கூட்டு அணி நிகழ்வில் பதக்கம் வென்றனர்.