Header

Sri Lanka Army

Defender of the Nation

29th December 2021 13:18:06 Hours

புதிய யாழ். தளபதி 55 வது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை அலகுகளுக்கு விஜயம்

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் திங்கட்கிழமை (27) கடைக்காடு 55 வது படைப்பிரிவுக்கான தனது முதல் கள விஜயத்தை மேற்கொண்டார்.

இதன் போது 55 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன அவர்களால் வரவேற்கப்பட்டதோடு பிரதான நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இதன் பின்னர் மற்றுமொரு அம்சமாக தனது வருகையை நினைவு சேர்க்கும் வகையில் படைப்பிரிவின் வளாகத்தில் மரித மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதோடு, குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். மேலும் அவர் படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள்க்கான உரையொன்றில் தமது பணிகள், ஒழுக்கம் தமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே உள்ள சமநிலை ஆகியவற்றின் முக்கியத்துவதம் சம்பந்தமாக குறிப்பிட்டார்.

விஜயம் செய்த பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 55 வது படைப்பிரிவின் தளபதியிடமிருந்து பொறுப்புகள் பற்றிய விளக்கத்தையும் பெற்றுக்கொண்டார். பின்னர், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 551,552 மற்றும் 553 பிரிகேட்டிற்கும் பெரியபச்சபாளையில் உள்ள படையலகு பயிற்சிப் பாடசாலைக்கும் விஜயம் செய்தார், இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் மற்றும் 55 வது படைப்பிரிவின் சிப்பாய்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்