29th December 2021 14:18:06 Hours
யாழ்.பாதுகாப்பு படைகளின் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் யாழ்பாணத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக சமய ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சமயப் பிரமுகர்களை செவ்வாய்கிழமை (28) சந்தித்தார்.
யாழ். மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாக விகாரையில் நடைபெற்ற பௌத்த கிரியைகளில் முதலில் கலந்து கொண்ட புதிய தளபதி பிரதம தேரர் மீகஹஜந்துரே ஸ்ரீ விமலதேவ தேரருக்கு தானம் வழங்கினார்.
பின்னர் அவர் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பி.ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டார். பின்னர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம், குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோரும் அவரது புதிய அலுவலகத்தை ஆசிர்வதித்தனர். இதன் போது சில யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக பணிநிலை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.