Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 21:58:38 Hours

இராணுவ தளபதி தொழிநுட்பம் ஊடாக வறிய குடும்பத்திற்கான வீட்டை திறந்து வைத்தார்

பொறியியலாளர் சேவைப் படையணியின் தொழில்நுட்பத் திறன்களுடன் “லெப்டினன் கேணல் டபிள்யூ.டி. உதய பிரியந்த டி சில்வா ஞாபகார்த்த நண்பர்கள் வட்டத்தின்” உறுப்பினர்கள் அம்பலாங்கொடையில் வறிய குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் சமயச் அனுஷ்டனங்களின் மத்தியில் கையளித்தனர்.

லெப்டினன்ட் கேணல் டபிள்யூ.டி.உதய பிரியந்த டி சில்வாவின் நினைவாக நண்பர்கள் வட்டம் எனப் பெயர் பெற்ற லெப்டினன்ட் கேணல் டபிள்யூ.டி.உதய பிரியந்த டி சில்வாவின் நினைவாகப் கஜபா படையணியின் படைத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கருத்தாகும் மேலும் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் அம்பலாங்கொடையில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான திரு கே.ஏ.ஜகத் நிஷாந்த அவர்களுக்கான புதிய வீடு திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் வீட்டுக்கான சாவி ஒப்படைக்கப்பட்டது.

திறப்பு விழாவின் போது, ஜெனரல் சவேந்திர சில்வா பயனாளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், 1997 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி நெடுங்கேணியில் தனது உயிர் நீத்த கஜபா படையணியின் அதிகாரி கட்டளை லெப்டினன்ட் கேணல் டபிள்யூ.டி உதய பிரியந்த டி சில்வாவின் நினைவுகளை நினைவு கூர மறக்கவில்லை. மேலும் 'ஜெய சிகுரு' நடவடிக்கையின் போது, அப்போது அவருடைய கட்டளை அதிகாரியாக இருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் மதிய நேர உணவைப் பகிர்ந்துகொண்டதையும் நினைவுபடுத்தினார்.

லெப்டினன்ட் கேணல் டபிள்யூ.டி.உதய பிரியந்த டி சில்வா ஞாபகார்த்த நண்பர்கள் வட்டத்தின் நிதியுதவியுடன் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின்படி இராணுவத்தின் பொறியியலாளர் படையினரால் சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய வீடு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதுடன். நிர்மாணப் பணிகளுக்கு இராணுவத்தின் உதவியை அமைப்பின் தலைவர் பியால் லமாஹேவா அவர்களினால் விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு பிரதம அதிதியாக ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை அழைத்திருந்தனர்.

பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அம்பலாங்கொடையில் புதிய வீட்டை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்களினால் திறன் வாய்ந்த பொறியியல் மற்றும் இதர சிப்பாய்கள் வழங்கிதுடன் லெப்டினன்ட் கேணல் டபிள்யூ.டி. உதய பிரியந்த டி சில்வா ஞாபகார்த்த நண்பர்கள் வட்டத்தின் தலைவர் திரு பியல் லமாஹேவாவின் நிதி மற்றும் வளங்களுடன் இத்திட்டத்தை படையினர் நிறைவு செய்யதனர்.

இராணுவத் தளபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் பொறியியலாளர் சேவைப் படையணி மற்றும் 14 வது கெமுனு ஹேவா படையணி படையினர் இணைந்து அம்பலாங்கொடை கொடஹேன ஏழை குடும்பத்திற்கான இந்த புதிய வீட்டை நிர்மாணித்தனர்.வறுமையில் வாழும் திரு.கே.ஏ.ஜகத் நிஷாந்தவின் வாழ்க்கை நிலை குறித்து இராணுவத் தளபதியிடம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, நிதியுதவி செய்பவர்களின், செலவினங்களைக் குறைப்பதற்காக இராணுவ ஆளணி பலத்தை அவர்களின் கட்டுமான பணிகளுக்காக வழங்கப்பட்டது.

பழங்கால மரபுகளுக்கு இணங்க, அன்றைய தினத்தின் கெளரவ அதிதியாக, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் அனுசரணையாளர்களும் சுப நேரத்தில் பயனாளிகளுடன் இணைந்து விளக்கு ஏற்றுதல் மற்றும் பால் பொங்கும் சடங்குகளில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, பொறியியலாளர் சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த குமார, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.