Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 10:58:50 Hours

231 வது பிரிகேட் படையினர் மேலும் ஒரு வீட்டை புதுப்பித்து வழங்கினர்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேடின் 4 வது கெமுனு படையினரால் சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு நல்லுறவின் பிணைப்பை வலுப்படுத்துவற்கு மட்டக்களப்பு வாழைச்சேனையில் வறிய குடும்பம் ஒன்றிற்காக மேலும் ஒரு வீட்டைப் மறுசீரமைத்து வியாழன் (28) அன்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எம் ஜே எப் வலய 1, பிராந்திய தலைவர் மற்றும் லயன்ஸ் கழக "77 எண்ணங்களின் எதிர்பார்ப்பு" இன் தலைவரான கே.லோகேந்திரன் வழங்கிய அனுசரணையில் 4 வது கெமுணு படையினரால் சில வாரங்களில் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கை நிலைமையை 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திபுல பண்டார அவர்கள் அனுசரனையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, நன்கொடையாளர் திட்டத்திற்கு அனுசரணை வழங்க ஒப்புக்கொண்டார். இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக 231 வது பிரிகேடின் தளபதி கலந்து கொண்டார்.

231 வது பிரிகேட் தளபதி, 4 வது கெமுனு படையணி கட்டளை அதிகாரி, 231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 4 வது கெமுனு படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர்.