Header

Sri Lanka Army

Defender of the Nation

29th December 2021 17:47:47 Hours

542 வது பிரிகேடினரால் மன்னாரில் இலவசமாக கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

சிவில்-இராணுவ உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வன்னி பிரதேசத்தின் கஷ்ட பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த வறுமையான மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக கலேவல மக்கள் வங்கி கிளை மற்றும் டெலிகொம் மொபிடல் நிறுவனம் வழங்கிய நிதி உதவியை கொண்டு மன்னார் இசைமழைத்தாழ்வு ஆரம்ப பிரிவு பாடசாலை மற்றும் தம்பபன்னைக்குளம் ஆரம்ப பிரிவு பாடசாலை, பன்னைவெட்டுவான் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அநாதரவான 54 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வியாழக்கிழமை (23) வழங்கப்பட்டன.

54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் யு.டி.விஜேசேகர, 542 வது பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.எஸ்.வி பெர்னாண்டோ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், மேற்படி விநியோகத் திட்டம் 15 (தொ) கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களால் இசைமழைத்தாழ்வு சனசமூக நிலையத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 54 வது படைப்பிரிவு தளபதி , 542 வது பிரிகேட் தளபதி. 54 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி, கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.