Header

Sri Lanka Army

Defenders of the Nation

29th December 2021 14:09:56 Hours

யாழ். படையினருக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் புதுவருட வாழ்த்துக்கள்

புத்தாண்டு விடியலை முன்னிட்டு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (29) காலை யாழ். புது வருடகால பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் குடும்பங்களிலுருந்து அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி, வடக்கில் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர் மீதான தனது அக்கறையை எடுத்துக்காட்டுவதற்காவும் விஜயம் மேற்கொண்டார்.

குடாநாட்டில் சேவையாற்றும் படையினர் குழுவின் அனைத்து நிலையிலான குழுவிற்கு உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அனைத்து முப்படை வீரர்களின் நினைவாக முதலில் அஞ்சலி செலுத்தியதுடன், இன்னும் குணமடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காயமடைந்த போர்வீரர்கள் நலமுடன் இருக்க பிராத்தனை செய்துக் கொண்டார். மேலும் முப்படையினர்களினால் மீட்புபணிகளில் ஆற்றப்படும் சிறந்த பணிகளை இராணுவத் தளபதி பாராட்டியதுடன் அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டார்.

“2021 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, நீங்கள் மற்றும் எங்கள் சகோதர சேவைகள், சொந்த உயிருக்கு ஆபத்துகள் இருந்தபோதிலும், தேசத்தின் சிறந்த நலனுக்காக எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன். 'முடியாதென்று எதுவும் கிடையாது'. என்ற உறுதிமொழியுடன் தொற்றுநோயின் மோசமான நிலையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகளைக் கொண்டுவருவதற்கு இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்குவதற்கு கடற்படை பெரிதும் பங்களித்துள்ளதுடன் அது மாத்திரமன்றி, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இதேபோன்ற மற்றொரு சவாலான சேதனை பசளை உற்பத்தியை ஆரம்பித்து அதற்காக தொழில்முறை வீரர்களாகிய எமக்கு இப்பணியை ஒப்படைத்துள்ளார. மிகுந்த நம்பிக்கையுடன் பசுமை வேளாண்மை நடவடிக்கை மையத்தின் தலைவராக ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார், மேலும் இந்த புதிய சவாலான பொறுப்பில் உங்கள் பங்கேற்பு நாட்டை பசுமையாக மாற்றும் அதே வேளையில் விரும்பிய இலக்குகளை அடைய உதவும், ”என்று அவர் குறித்துக் காட்டினார்.

ஒரு தொழில்முறை இராணுவம் என்ற வகையில் அனைத்து தரப்பு வீரர்களும் தேசிய பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதைக் குறிப்பிட்டுப் பாராட்டிய அவர், போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஏனைய சமூகவிரோத செயற்பாடுகளை எமது மண்ணில் இருந்து ஒழிப்பதற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஜனாதிபதியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வசதியற்ற பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது மைதானங்கள், பொது இடங்கள், குளங்கள், மேம் பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது போன்ற அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதும் சமாந்தர முக்கியத்துவமானது. அந்த தேசிய பணிகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பின் அளவு வரும் ஆண்டிலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோர் வழங்கிய ஆதரவையும் பாராட்ட வேண்டும்” என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

அவர் தனது பதவிக்காலத்தில் இராணுவத்தில் உள்ள அனைத்து நிலையினர்களுக்கும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை வழங்கியதுடன் வரும் புத்தாண்டில் இராணுவத்தின் அனைத்து நிலையினர்ளுக்கும் மேலும் பதவி உயர்வுகளை வழங்கவும் உறுதியளித்தார். “ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு எங்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புப் பணிகள் மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுவது போன்றவை பாராட்டப்பட வேண்டும் எனவும் வரவிருக்கும் புத்தாண்டு நிலையில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததற்காக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் அனைத்து நிலையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் நமது ஆயுதப் பணியாளர்கள் மீது தேசம் மிகுந்த மதிப்பைக் கொண்டிருப்பதால், நீங்கள் சிறப்பாக கடமைகளைச் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தில் பிரதம அதிதியை யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் கடற்படை மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் டிஎஸ்கே பெரேரா, பலாலி விமானப் படைத் தள முகாம் கட்டளை அதிகார குறூப் கெப்டன் ருவான் சந்திம உள்ளிட்ட முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளால் படையினருக்கு உரையாற்றுவதற்காக மன்பதாக பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதிக்கு விமான தளத்தில் வரவேற்பு மரியாதையளித்து வரவேக்கப்பட்டார். பின்னர் இலங்கை பலாலி விமானப்படைத் தளத்தில் படையினருக்கு உரை நிகழ்த்தினார்.

முப்படையினருக்கான உரையின் முடிவில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அனைத்து அலகுகள் சார்பாகவும், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் இணைந்து வருகை தந்த பாதுகாப்புப் படைத் தளபதிக்கு பாராட்டுச் சின்னங்களை வழங்கினார். இராணுவத் தளபதி. பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியினால் யாழ், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.