Header

Sri Lanka Army

Defender of the Nation

29th December 2021 11:34:57 Hours

ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான முதற்குழு தென் சூடானுக்கு பயணம்

தென்சூடானில் ஐநா அமைதிகாக்கும்(UNMISS) பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள 2ம் நிலை சிறிமெட் (SRIMED) வைத்தியாலையில் பணியாற்றுவதற்காக தயாராகவுள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் 8 வது இராணுவ படைக் குழுவின் முதலாவது குழுவினர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர அவர்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் புதன்கிழமை (29) அதிகாலை தென்சூடான் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதன்போது மேற்படி குழுவிலுள்ள 11 அதிகாரிகள் மற்றும் 22 சிப்பாய்களுடன் இராணுவ தளபதியவர்கள் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டதோடு, மேற்படி குழுவினரின் அணிவகுப்பு மரியாதை தொடர்ந்து இராணுவ தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன் போது இராணுவ தளபதியவர்கள் சேவையின் போதான உயர் ஒழுக்கத்துடனான பண்புகள், தென் சூடானில் பணியாற்றும் காலங்களின் போதான அர்பணிப்பு என்பன தொடர்பிலும் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டதோடு, அவர்களின் தயார் நிலைமைகள் மற்றும் ஏனைய தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். மேலும் இதன்போது சிரேஷ்ட அதிகாரிகள் சிலரால் இராணுவ தளபதியவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

குழு தளபதி லெப்டினன்ட் கேணல் என்.எம் நிஃப்லர் மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் டி.வை.எஸ் குமார தலைமையில் தென் சூடானுக்கு செல்லும் 8 வது படைக் குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள் மற்றும் 13 அதிகாரிகள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் பிரிகேடியர் காலன விஜேவர்தன உட்பட 66 இராணுவ வீரர்கள் உள்ளனர்.

இந்த குழுவில் கள தலைமை பொறுப்பதிகாரி, தாதியர், அவசர சிகிச்சை தாதியர் (மகளிர் மருத்துவம்), சத்திர சிகிச்சைக் கூட தொழிநுட்பவியலாளர், பிசியோதெரபிஸ்ட்கள் (டிபிஎம்), ரேடியோகிராஃபர், எக்ஸ்ரே தொழிநுட்பவியலாளர்கள், ரேடியலஜிஸ்ட், பல் மருத்துவர் மற்றும் பல் உதவியாளர், பல் தொழிநுட்பவியலாளர், மருத்துவ களஞ்சிய பொறுப்பாளர்கள், பார்மசிஸ்ட், மருந்தகவியலாளர், ஆய்வக தொழிநுட்பவியலாளர்கள், தகவல் தொடர்பு தொழிநுட்பவியலாளர்கள், சுகாதார உதவியாளர், நிர்வாக எழுதுவினைஞர், சமையல்காரர்கள், ஆம்புலன்ஸ் சாரதிகள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேத அறை உதவியாளர் ஆகியோர் அடங்குவதுடன் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியைச் சேர்ந்த சிப்பாய்களான 40, இலங்கை சமிக்ஞைப் படையணியின் இருவரும் (02), பொறியியலாளர் சேவைப் படையணியின் (02), இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் (04) மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின்(01) உள்ளடங்குவர். அதேநேரம், தற்போதும் பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவினர் 31 ஜனவரி 2022 நாடு திரும்ப உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென் சூடானிலிருக்கும் மேற்படி போர்கள நடவடிக்கைகளின் போது பயன்படுத்த உகந்த வகையிலான சிறிமெட் வைத்தியசாலையானது, அறுவை சிகிச்சை பிரிவு, பணியாளர்கள் ஓய்வு அறை, தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, பல் அறுவை சிகிச்சை பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, மருந்தகம், மருத்து கலஞ்சியம் உள்ளிட்ட இரண்டாம் நிலை மருத்துவச் சேவைகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், கதிரியக்கருவியல் துறை, மருத்துவ ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு, தொற்று நீக்கம் செய்யும் பிரிவு, உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவு, மருத்துவக் கழிவகற்றல் பிரிவு, பிணவறை, தனிமைப்படுத்தல் வார்டுகள் மற்றும் சலவைக் அறை மற்றும் நடைப் பயிற்சி மற்றும் சுவாச திறன்கள் தொடர்பிலான சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்ககூடிய ஏரோ-மெடிக்கல் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த வைத்தியசாலை இலங்கை படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற அதேநேரம் இதுவரையில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 7 குழுக்களும் ஐநாவின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளன.

மேற்படி குழுவினரை தென் சூடானுக்கு ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, இலங்கை இராணுவ வைத்திய படையணியின் சிரேஷ்ட அதிகாரிள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.