28th December 2021 07:45:07 Hours
இலங்கை இராணுவ வழி முன்னோக்கு வியூகம் 2020 - 2025' இற்கு இணையாக, இராணுவத் தளபதி மற்றும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், வெலிகந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் ஆரம்பமான இளம் உத்தியோகத்தர்களுக்கான இராணுவ நிபுணத்துவம் மற்றும் தோழமை குறித்த ஒரு வார கால செயலமர்வு செவ்வாய்கிழமை (21) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த செயலமர்வில் ‘இலங்கை இராணுவத்தின் வழி முன்னோக்கு வியூகம் 2020 – 2025’ இல் வகுக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் தொலைநோக்கு கொள்கையின் பிரகாரம் இராணுவ நடைமுறைகள், இராணுவ கோட்பாடுகள், பயிற்சி தொகுதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
விரிவுரைகள் இராணுவத்தின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு அம்சங்கள், அதிகாரிகள் தொழில் முன்னேற்றம், சமூக ஊடக மேலாண்மை போன்ற அம்சங்களை அடிப்படையாக கொண்டு இடம்பெற்றது.
மேலும், அதிகாரிகள் நடைமுறை அமர்வுகளில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் நிறைவு விழாவின் போது செயலமர்வு நிறைவுற்றது.