Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2021 09:00:07 Hours

கெவிலியாமடுவில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு வறிய குடும்பமொன்றுக்கு அன்பளிப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணிக்கு முதல் தடவையாக ஞாயிற்றுக்கிழமை (26) மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது,மட்டக்களப்பு, மங்களாகம, கெவிலியாமடு பகுதியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று வறிய குடும்பம் ஒன்றிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகள் சிரேஷ்ட உளவியலாளரும் ஆளுமை திறன் மேம்பாட்டு ஆலோசகரும் நேர்மறைச் சிந்தனைகள் தொடர்பிலான விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளருமான திரு சந்தன குணவர்தன அவர்களினால் வழங்கப்பட்டிருந்ததோடு, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் சேவையாற்றும் பகுதியில் வசித்து வந்த திருமதி ஏ.எம்.நந்தனி என்பவரின் குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு அவருக்கான புதிய வீட்டை நிர்மாணித்துக் கொடுக்க படையினர் முன்வந்தனர்.

மறைந்த திரு சந்தன குணவர்தன அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதி உதவியை கொண்டு 11 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்களால் வறிய குடும்பத்திற்கான வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

மத அனுட்டானங்கள் மற்றும் சம்பிரதாய அடிப்படையிலான நிகழ்வுகளை தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களினால் பயானாளிகளிடம் வீட்டின் சாவிகள் வழங்கி வைக்கப்பட்டன. அதே நேரத்தில் வீட்டி உபயோகத்திற்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, 231 வது பிரிகேட் தளபதி, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி கட்டளை அதிகாரி, பயனாளி குடும்பத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.