28th December 2021 09:31:07 Hours
இலங்கை இராணுவத்தின் 13 வது தலைமை களப் பொறியியலாளராக மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர இராணுவ தலைமையகத்திலுள்ள அலுவலகத்தில் திங்கட்கிழமை (27) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது, மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர மத அனுட்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், அலுவலகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளால் புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர தலைமை கள பொறியியலாளராக பதவியேற்பதற்கு முன்னதாக குறித்த பதவியை வகித்த மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் 35 வருடகால இராணுவ சேவையை பூர்த்தி செய்துகொண்டு ஓய்வுபெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கள பொறியியலாளர் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரும் நிகழ்வில் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கலந்துகொண்டனர்.