28th December 2021 08:30:07 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள், வேயங்கொடவில் அமைந்துள்ள 14 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 141 வது பிரிகேட் மற்றும் பல பட்டாலியன்களுக்கான நேரடி விஜயமொன்றை வியாழக்கிழமை (23) மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக வருகை தந்த புதிய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களுக்கு 14 வது படைப்பிரிவு தளபதி ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன மற்றும் 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே ஆகியோரால் வரவேற்பளிக்கப்ட்டதோடு, 141 வது பிரிகேடின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
தளபதியவர்களின் வருகையின் நினைவாக 141வது பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதை தொடர்ந்து விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார். இவ்விஜயத்தின் இரண்டாம் கட்டமாக 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளுக்குமான தனது விஜயத்தை மேற்கொண்டதுடன் , பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், 141வது பிரிகேட்டின் அதிகாரிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகளும் மேற்படி நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.