Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2021 08:00:07 Hours

59 வது பிரிவு தலைமையகம் சேதனை பசளை உற்பத்தி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறது

முல்லைத்தீவு நந்திக்கடலில் உள்ள 59 வது காலாட்படைபிரிவு தலைமையகத்தில் உற்பத்தி முறைகளை கடைப்பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை வகுத்தல், சேதனை பசளை பாவனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளை கண்டறிதல் மற்றும் இதர நடைமுறை அம்சங்கள் தொடர்பான பசுமை வேளாண்மைத் திட்டம் குறித்த கூட்டம் 2021 டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர், மகாவலி அதிகாரசபையின் எல் வலய வதிவிட திட்ட முகாமையாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி மாகாண உதவி ஆணையாளர், முல்லைத்தீவு மாவட்ட தேசிய உர செயலக உதவிப் பணிப்பாளர் மற்றும் இலங்கை உர நிறுவன பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் , 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 591, மற்றும் 592 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் படைப்பிரிவு மற்றும் பிரிகேட் தலைமையகங்களின் சிவில் விவகார அதிகாரிகள் உட்பட முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம்,59,64 மற்றும் 68 வது படைப்பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.