Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2021 12:00:28 Hours

புதிய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் 51 மற்றும் 52 வது படைப்பிரிவுகளுக்கு பரீட்சார்த்த விஜயம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 27 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் யாழ். குடாநாட்டிலுள்ள 51 மற்றும் 52 வது படைப்பிரிவுகளுக்கான பரீட்சார்த்த விஜயமொன்றை 2021 டிசம்பர் 21-22 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்ததார்.

யாழ்.பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் 51 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த போது 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர், கட்டளை அதிகாரிகள் மற்றும் 51 வது படைப்பிரிவு சிப்பாய்களுக்கான உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். பின்னர் படைப்பிரிவுத் தளபதியினால் படைப்பிரிவு பணிகள் தொடர்பில் தெளிவூட்டினார்.

புதன்கிழமை (22) 52 வது படைப்பிரிவிற்கு விஜயம் மேற்கொண்ட தளபதியவர்களுக்கு மிரிசுவில் பகுதியில் அமைந்துள்ள 52 வது படைப்பிரிவு தலைமையக தளபதி பிரிகேடியர் சமந்த விக்கிரமசேன அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, அவர் அலுவலக வளாகத்திற்கு செல்லும் முன்பாக படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கபட்டது. அதனையடுத்து 52 வது படையணியின் பொறுப்பக்கள் மற்றும் கடமைகள் தொடர்பில் அவருக்கு படைப்பிரிவு தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டது.

51 மற்றும் 52 வது படைப்பிரிவின் படையினருக்கு உரைகளை நிகழ்த்திய தளபதியவர்கள், சிப்பாய்களின் முழுமையான அர்ப்பணிப்பு, மற்றும் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான கடினமான உழைப்பு என்பவற்றின் அவசியங்களை வலியுறுத்தியதோடு, பயிற்சி, உயர் நிலை ஒழுக்கம், கட்டளைகள் மற்றும் அர்பணிப்பான கடமைகளின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், யாழ். பாதுகாப்புப் படைகளின் இலக்குகளை அடைய அடைய அனைத்து வீரர்களும் தங்களால் இயன்ற அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த கள விஜயங்களின் போது, சிப்பாய்களின் கடமைகள், நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடிய தளபதியவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

மேலும், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் விஜயத்தையொட்டி யாழ். குடாநாட்டில் படையினர் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான ஒற்றுமையை பலபடுத்தும் வகையில் 7 வது கஜபா படையணியினரால் அப்பகுதியிலுள்ள 31 கர்பிணி தாய்மார்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம் மற்றும் பணி நிலை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.