Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2021 11:40:52 Hours

யாழில் 31 கர்பிணி பெண்களுக்கு போஷாக்கு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்

யாழில் அமைந்துள்ள 522 வது பிரிகேடின் கீழிருக்கும் 7 வது கஜபா படையணியின் 31 வது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 522 வது பிரிகேடினால் தெரிவு செய்யப்பட்ட 31 கர்பிணி பெண்களுக்கு போஷாக்கு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் புதன்கிழமை (22) அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இதன்போது, 52 வது படைப்பிரிவு தலைமையகத்தின் தளபதி மற்றும் 7 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் அழைப்பின் பேரில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களும் கலந்துகொண்டிருந்ததோடு, 31 கர்பிணி பெண்களுக்குமான 31 போஷாக்கு பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

52 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஜீஜீஏஸ் விக்கிரமசேன, 522 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமந்த ஹெட்டிகே மற்றும் 7 கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இணைந்து மேற்படி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.