Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2021 12:22:13 Hours

61 வது படைப்பிரிவின் புதிய தளபதி அலுவலக கடமைகளை பொறுப்பேற்கிறார்

61 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட பூசாவில் அமைந்துள்ள 61வது படைப்பிரிவு தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த புதிய தளபதிக்கு 14 வது கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற மத அனுட்டானங்களுக்கு மத்தியில் அவர் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். பதவியேற்பின் நினைவம்சமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த அவர், 61 வது படைப்பிரிவின் சிப்பாய்களுக்கான ஆற்றிய உரையில் தனது பணி நோக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

61 வது படைப்பிரிவின் கீழுள்ள 611,612 மற்றும் 613 வது பிரிகேட்களின் தளபதிகள், அதிகாரிகள், சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக புத்தலவில் அமைந்துள்ள இராணுவ போர் பாடசாலையின் தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.