Header

Sri Lanka Army

Defender of the Nation

26th December 2021 09:36:32 Hours

குட்டிகலையில் 2 ஆம் கட்ட தெங்கு நடும் திட்டம் ஆரம்பம்

இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் தளபதி பிரிகேடியர் எச்ஏபிபிகே ஹேவாவசம் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, 1 வது இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணினரால் குட்டிகலையில் சனிக்கிழமை (11) 200 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னங் கன்றுகள் நாட்டும் திட்டத்தின் 2 ஆம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை தெங்கு பயிர் செய்கை சபையின் அனுசரணையுடன் 1 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ்.தேமுனி அவர்களின் கண்காணிப்பின் கீழ், தெங்கு செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குட்டிகலவில் அமைந்துள்ள 1 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் கேடி கோரக்கபிட்டிய அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அப்படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.