25th December 2021 11:10:11 Hours
வவுனியா மாவட்டம் பழையஉறுவை ஆரம்ப பாடசாலையில் இன்று திங்கட்கிழமை (20) 12 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் புராதன ஆவரந்துலாவ ஸ்ரீ சேத்தியகிரி விகாரயைின் தலைமை பிக்கு, 2வது இயந்திரவியல் காலாட் படையணியின் நடவடிக்கை மற்றும் பயிற்சி அதிகாரி, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர். கொழும்பைச் சேர்ந்த திரு. சாமர பிரியஷாந்த என்பவரால் இதற்கான அனுசரணையினை வழங்கிருந்தார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் 21 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க ஆகியோரின் ஆசியுடன் கஷ்டப் பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 213 ஆவது பிரிகேட் தளபதி கேணல் எல்.ஜி.ஜே.என் ஆரியதிலக்க அவர்களுடன் 2 இயந்திரவியல் காலாட்படை படையணி கட்டளை அதிகாரி நன்கொடை நிகழ்வை ஏற்பாடு செய்தார்.