24th December 2021 16:33:28 Hours
இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில் 'இராணுவ கரோல்ஸ்' கீதம் இசைக்கும் நிகழ்வுகள் நெலும் பொக்குண கலையரங்கத்தில் கிறிஸ்தவ மத குருமார்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இராணுவ குடும்பங்களின் பங்கேற்புடன் இன்று (22) பிற்பகல் ஆரம்பமானது.
மேலும், இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் விமானப் படை எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக மற்றும் திருமதி நெலுன் குணதிலக, பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணதிலக அவர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் நிஷாந்த உலுகாதென்னேமற்றும் அவரது பாரியார்,விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன மற்றும் அவரது பாரியார் , இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவ தொண்டர் படையணி தளபதி மற்றும் விஷேட அழைப்பாளர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர நிகழ்வின் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்ததோடு , வரவேற்புரையினையும் நிகழ்த்தினார். அதனையடுத்து கொழும்பு 8 அனைத்து புனிதர்கள் தேவாலயத்தின் திருச்சபை பாதிரியார் வண. ஜூட் ஷர்மன் அவர்களினால் தேவாராதனைகள் நடத்தப்பட்டு நற்செய்தி வாசிக்கப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி பிரார்த்திக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அன்றைய பிரதம அதிதியாக கலந்துகொண்ட அருட்தந்தை ஐவன் பெரேரா அவர்கள் நத்தார் வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.
'அமைதியின் இளவரசர்' இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் வகையில், கரோல், பிரார்த்தனை, நடனங்கள், பாடல்கள் மற்றும் பிற கலை அம்சங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அனைத்து மதங்களையும் சேர்ந்த சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை மத நல்லிணக்கை ஊக்குவிக்கும் விதமான அமைந்திருந்தது.
இராணுவ இசை மற்றும் அரங்கியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொஹான் பெஞ்சமின் அவர்களினால் இந்நிகழ்வுகளின் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்நிகழ்வின் போது, கொரின் அல்மேதா, தம்மிக்க வல்பொல, மரியசெல் குணதிலக்க, டி லானெரோல் சகோதரர்கள், அனில் பாரதி, எஷாந்த டி அன்ட்ராடோ, உமரியா சிங்கவன்ச, ராஜீவ் செபஸ்டியன், பாத்தியா ஜயக்கொடி உள்ளிட்ட பிரபல பாடகர்கள் மற்றும் பல இராணுவப் பாடகர்கள் “அமைதியின் இளவரசர்” இயேசுவுக்குப் பாடல்களைப் பாடி பங்கேற்பாளர்களுக்கு இசை விருந்தளித்தனர்.
இராணுவத்தின் வருடாந்த நிகழ்வம்சங்களான கிறிஸ்மஸ் நிகழ்வுகள் கிறிஸ்மஸ் பண்டிகையின் வருகையை அறிவிக்கும் வகையில் அமைந்திருந்ததோடு பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரபல சுதந்திர இசைக் கலைஞர்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இசை நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வில் அங்கவீனமுற்ற போர் வீரர்களும் கலந்துகொண்டிருந்ததோடு அவர்கள் சேவையில் ஈடுபட்டிருந்த காலத்தில் தங்களோடு பணியாற்றிய சக வீரர்களின் இசை நிகழ்வுகளை கண்டுகழித்தமை சிறப்பம்சமாகும்.
இதன்போது ஜெனரல் சவேந்திர சில்வா அருட்தந்தை ஜூட் ஷர்மன் மற்றும் அருட்தந்தை இவான் பெரேரா ஆகியோருக்கு தனது வணக்கத்தை செலுத்தியதுடன் நிகழ்வின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இராணுவத்தின் சார்பாக நன்றிகளை கூறிக்கொண்டார். இந்த நிகழ்வில் எந்தேரமுல்ல புனித ஜோசப் கல்லூரி, குட் ஷப்பர்ட் கொன்வன்ட் பாடசாலைகளை கலைஞர்களின் கூட்டிசை மற்றும் ஏனைய பாடகர்களும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது நத்தார் தாத்தாவின் வருகையும் சிறுவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிய அம்சங்களும் கண்கவர் வகையில் அமைந்திருந்தன. மேலும் முன்னாள் தளபதிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் சிப்பாய்கள் விஷேட பிரமுகர்களும் அவர்களது வாழ்க்கை துணைவியருடன் கலந்துகொண்டிருந்தனர்.