24th December 2021 21:10:45 Hours
திருமதி சுஜீவா நெல்சன் தலைமையிலான இராணுவ சேவை வனிதையர் பிரிவு போரில் உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்கள், சேவையிலிருக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பத்தில் கல்விகற்கும் மாணவர்களின் நலன்புரிச் செயற்பாடுகளை மேம்படுத்தியுள்ளது.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சா/த மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 3 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (23) காலை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சனின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். பிரதம விருந்தினர்களின் வருகையின் போது திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் இணைந்து பயனாளி குடும்பங்களின் பிள்ளைகள் இணைந்து வெற்றிலை பாகுக்குகளை வழங்கு சம்பிரதாய அடிப்படையில் வரவேற்பளித்தனர். அதனையடுத்து பிரதம அதிதி கலாசார நிகழ்வுகளுடன் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசளிப்பு நிகழ்வின் போது, க.பொ.த உயர்தர (2020) மற்றும் சாதாரண தரம் (2018) பரீட்சைகளில் சிறந்த சாதனையாளர்களுக்கான 115 புலமைப்பரிசில்கள் மற்றும் படைப்பிரிவு மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 91 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதன்படி, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் A9 சித்தி பெற்ற 59 மாணவர்களுக்கும் ரூபா 25000/= வங்கியில் வைப்புச் செய்யப்பட்டதோடு அகராதி ஒன்றும் வழங்கப்பட்டது. மேலும் க.பொ.த. உயர்தரத்தில் அதிக வெட்டுப் புள்ளிகளை பெற்ற 32 மாணவர்களுக்கும் அவர்களின் உயர் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 30000/= வழங்கப்பட்டதோடு அகராதியொன்றும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 24 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் தளபதியின் நிதியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை கொண்டு இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதோடு, தெரிவு செய்யப்பட்ட மாவணர்களுக்கு சலுகை அடிப்படையில் 3 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம விருந்தினரான ஜெனரல் சவேந்திர சில்வா, திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் ஏனைய பிரமுகர்களால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. பிரதம விருந்தினரான ஜெனரல் சவேந்திர சில்வா, திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் மேடைக்கு வருகைத் தந்ததை தொடர்ந்து ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்ட பின்னர் சேவை வனிதையர் பிரிவு தொற்றுநோய் காலத்திக் சவால்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கும் சமூக பணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். கல்வியே எதிர்காலத்தை வளமாக்கிகொள்ளகூடிய ஆயுதம் என்பதால் அதற்காக வழங்கப்பட்ட ஊக்கத் தொகைகளை கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
படையணி சேவை வனிதையர் பிரிவுகளின் தலைவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ் பெண்கள், அரசாங்க ஊழியர்கள், அந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், என பலரும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பயன்பெற்ற விசாகா கல்லூரி மாணவியொருவரால் நன்றிரை நிகழ்த்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.