23rd December 2021 15:45:12 Hours
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நாட்டிற்காக அர்பணிப்புக்கு தயாராகவிருக்கும் 316 துணிச்சலான பயிலிளவல் அதிகாரிகள் ஆண் மற்றும் பெண்களின் தோள்களில் அவர்களுக்கான சின்னங்கள் அணிவிப்பக்கப்பட்டு அதிமேதகு ஜனாதிபதியவர்களால் அலங்கரிக்கப்பட்டது. பெருமை மிகு இந்நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளின் களஞ்சியமாக விளங்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோராலும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளாலும் பயிற்சிகளை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு நிகழ்வுகளில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட அதிமேதகு ஜனாதிபதியவர்கள் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் வருகையுடன் ஆரம்பமாகியிருந்த அதேவேளை அவர்களின் வாகன தொடரணிக்கு நுழைவாயில் வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து வீர மரணம் அடைந்த வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை மறக்காமல் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி பிரிகேடியர் நலிந்த நியங்கொட அவர்களுடன் இணைந்து போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவுத்தூபிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதியவர்களினாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெண்கள் உள்ளடங்களாக 316 பயிலிளவல் அதிகாரிகளுக்கான இவ்விடுகை நிகழ்வானது அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அங்கிகாரமாக அமைந்திருப்பதோடு, நாட்டின் பாதுகாப்பு பொறிமுறையின் முக்கியஸ்தர்களால் அவர்களுக்கான அங்கிகாரம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது நிகழ்வின் பிரதம அதிதியான அதிமேதகு ஜனாதிபதியவர்கள் அணிவகுப்பு மைதானத்திற்கு வருகை தந்த வேளையில் புதிய கெடட் அதிகாரிகளுக்கான அங்கிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான சின்னங்களை அணிவிப்பதற்காகவும் அதிகாரி அங்கிகாரத்திற்கான வாள் வழங்கி வைப்பதற்குமாக அணிவகுப்பு மைதானத்திற்கு வருகை தருமாறு அதிமேதகு ஜனாதிபதியர்கள் உள்ளடங்களாக பாதுகாப்பு துறைசார் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பின்னர் புதிய பட்டதாரிகளால் பிரதம அதிதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவுகண்டது.
இந்த அணிவகுப்பு மரியாதையின் பிரதம கட்டளையாளராக மேஜர் ஆர்.ஏ.ஏ ரணவக மற்றும் இரண்டாம் கட்டளையாளராக கெப்டன் பீஏபீடீஏ பமுனுசிங்க செயற்பட்டதுடன் கல்லூரியின் சார்ஜண் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி – 1 டபிள்யூபீடீஆர் வீரசிங்க அவர்களினால் வழங்கப்பட்டு அணிவகுப்பானது கண்களை கவரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
தியத்தலாவவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் நிரந்தர படை பாடநெறி இல. 89 இன் 73 பயிலிளவல் அதிகாரிகளும் , நிரந்தர படை பாடநெறி இல. 90 இன் 13 பயிலிளவல் அதிகாரிகளும் நிரந்தர படை பாடநெறி இல. 89 பிராவோ இன் 150 பயிலிளவல் அதிகாரிகளும் (கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பாடநெறி 32,33,35), நிரந்தர படை பெண் பாடநெறி இல. 18 ஏ இன் ஒரு பயிலிளவல் அதிகாரியும் தொண்டர் படை பாடநெறி இல.61 இன் 60 பயிலிளவல் அதிகாரிகளும் தொண்டர் படை பெண் பாடநெறி இல.17 இன் 15 பயிலிளவல் அதிகாரிகளும் 2ம் லெப்டினன்ட்களாக நாடளாவிய ரீதியில் சேவையாற்றுவதற்காக அதிகாரவாணை வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகளுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொண்ட பின்னர் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் தேசத்தின் பாதுகாவலர்கள் என்ற அடிப்படையில் நாடு முழுவதிலும் சேவையாற்றுவர்.
சில நிமிடங்கள் இடம்பெற்ற பிரதம அதிதியின் சிறப்புரையை தொடர்ந்து நிகழ்வு நிறைவை எட்டியது.
அதனையடுத்து அனைத்து பட்டதாரிகளும் பிரதம விருந்தினர்களான அதிமேதகு ஜனாதிபதியவர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர். பின்னர் இராணுவ கல்வியற் கல்லூரிக்கான விஜயத்தின் நினைவம்சமாக ஜனாதிபதியவர்களினால் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டதை தொடர்ந்து கெடட் அதிகாரிகளுக்கான விருந்தகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்ட பின்னர் ஜனாதிபதியவர்களால் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பயிலிளவல் அதிகாரிகளின் மற்றும் உறவினர்கள் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அதன் சிறப்பம்சங்களை கண்டுகழித்தனர்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் சிறந்த சாதனையாளர்கள்
நிரந்தர படை பாடநெறி இல - 89
முதல் உயர் சித்தி - படையலகு கனிஷ்ட அதிகாரி சிஎம்எம் ருக்ஷான்
வாள் கௌரவம் : படையலகு கனிஷ்ட அதிகாரி சிஎம்எம் ருக்ஷான்
நிரந்தர படை பாடநெறி இல - 89 பீ
முதல் உயர் சித்தி : குழு கனிஷ்ட அதிகாரி ஆர்டிஎல்ஏ சில்வா
வாள் கௌரவம் : அணி கனிஷ்ட அதிகாரி எச்ஈஏ ரஞ்சுலா
நிரந்தர படை பாடநெறி இல - 90
முதல் உயர் சித்தி : அணி கனிஷ்ட அதிகாரி டிஆர்சீடி ரத்நாயக்க
வாள் கௌரவம் : அணி கனிஷ்ட அதிகாரி டிஆர்சீடி ரத்நாயக்க
தொண்டர் படை பாடநெறி இல – 60
முதல் உயர் சித்தி : பயிலிளவல் அதிகாரி ஏஎம்டிடீஎன் பெரேரா
வாள் கௌரவம் : பயிலிளவல் அதிகாரி ஏஎம்டிடீஎன் பெரேரா
தொண்டர் படை பாடநெறி இல – 17
முதல் உயர் சித்தி : குழு கனிஷ்ட அதிகாரி எச்ஏடீ பிரபாஸ்வரி
வெளிநாட்டு சிறந்த பயிலிளவல் அதிகாரிக்கான கோல் விருது -
அணி கனிஷ்ட அதிகாரி எ எடம் – மாலைத்தீவுகள்