Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2021 09:49:00 Hours

காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே இராணுவத் தலைமையக காலாட் படை பணிப்பகத்தின் 21 வது பணிப்பாளராக செவ்வாய்க்கிழமை (21) பதவியேற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் புதிதாக நியமனம் பெற்ற காலாட் படை பணிப்பாளர் நாயகம் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் அவர் 61 வது படைப்பிரிவு தளபதியாக சேவையாற்றினார்.

இந்நிகழ்வில் பணிப்பக பதவி நிலை அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்ததோடு, மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் பெற்றதை தொடர்ந்தே மேற்படி புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.