Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2021 20:45:14 Hours

57 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கிறிஸ்மஸ் கீத நிகழ்வுகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகதுடன் இணைந்து 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிக்காட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் கீதம் இசைக்கும் நிகழ்வு 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வாத்திய இசைக்குழுவுடன் இணைந்து அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மற்றும் பாடகர் குழுக்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை (17) கிளிநொச்சி நகர மத்தியிலுள்ள புனித தெரேசா ஆயர் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் முகமாக வெள்ளிக்கிழமை (17) கிளிநொச்சியில் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதோடு, நேர்த்தியாக உடையணிந்த நத்தார் தாத்தாவினால் சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகளும் வழங்கி வைக்கப்ட்டன.

யாழ்ப்பாண ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம், பிரதி ஆயர் பி.ஜே.ஜெபரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு நிகழ்வின் பிரதம விருந்தினராக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க அவர்களும் கலந்துகொண்டிருந்தார். மேற்படி நிகழ்வுகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட்டன. இதன்போது பைபிள் வாசிப்பு மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இராணுவ இசைக்குழுவின் கலை அம்சங்கள் பங்கேற்பாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

கிளிநொச்சி பேராயர் அருட்தந்தை ஜேசுதாசன், 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 571 பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஜி.சி.எம்.எச்.கம்லத், 572 பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.பி.என்.ஏ.முத்துமலை, படையலகு கட்டளை அதிகாரிகள் படைப்பிரிவு பதவிநிலை அதிகாரிகள் கிறிஸ்தவ பக்தர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.