Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2021 21:50:14 Hours

முன்நோக்கு திட்டமிடல்கள் மற்றும் செயலாற்றுகை பணிப்பகத்தின் முதலாவது பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்கிறார்

இலங்கை சமிக்ஞை படையின் பிரிகேடியர் ரவி ஹேரத் திங்கட்கிழமை (20) இராணுவத் தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட முன்நோக்கு திட்டமிடல்கள் மற்றும் செயலாற்றுகை பணிப்பகத்தின் முதலாவது பணிப்பாளராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மத அனுஷ்டானங்களை தொடர்ந்து ,பிரிகேடியர் ரவி ஹேரத் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்நோக்கு திட்டமிடல்கள் மற்றும் செயலாற்றுகை பணிப்பகமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவான “2020 -2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல்” க்கு அமைய நடைமுறை பாதுகாப்பு தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டு நிறுவப்பட்ட பணிப்பகமாகும்.