Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2021 21:00:14 Hours

கிரிந்த பகுதியிலுள்ள 35 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுடன் பரிசுகள் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிகேடின் 23 வது கஜபா படையணியின் சிப்பாய்கள், தெற்கில் உள்ள நன்கொடையாளர் ஒருவரின் உதவியுடன், ஞாயிற்றுக்கிழமை மாத்தறை, கிரிந்தவிலுள்ள கிரிந்தகம ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கி வைத்தனர்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் மூலம் 35 வறிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் ஆசிர்வாதமும் கிட்டியது.

மேலும் இத்திட்டத்திற்கான நிதி உதவிகள் 12 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஜானக்க பல்லேக்கும்புர அவர்களுடன் இணைந்து 112 வது பிரிகேடின் 23 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் ஒருங்கிணைப்பின் பலனாக கிடைக்கப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.