Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2021 21:45:14 Hours

நன்கொடையாளர்களின் ஆதரவுடன் 62வது படைப்பிரிவு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க திரு மாதவ பெரேரா மற்றும் திருமதி சசிந்தா கட்டுகம்பொல அவர்களின் பாடசாலை நண்பர்கள் உட்பட நன்கொடையாளர் குழுவொன்று மாணவர்களின் நலனுக்காக பாடசாலைக்கு தேவையான பொருட்களை நன்கொடையாக மகாவலி அதிகார சபையின் எல் வலய சம்பத்நுவர பொதுப் பிரதேசத்தில் வழங்கியது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், வெலிஓயா 62 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்காக விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிவாரணப் பொதிகளில் பாடசாலை பைகள், மதிய உணவுப் பெட்டிகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் இனிப்புக்கள் பார்சல் ஆகியவை அடங்கும்.

62 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர, 621 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பெரகும் மற்றும் சில அதிகாரிகள் இந்த விநியோக திட்டத்தில் கலந்துகொண்டனர்.