Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2021 14:05:32 Hours

முல்லைத்தீவு படையினரின் உதவியில் 330 மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் பாடசாலை வசதிகள்

அமெரிக்காவில் வசித்துவரும் இரண்டு இலங்கையர்களான திருமதி பிரியந்த கமகே மற்றும் திரு டொன் லக்ஷ்மன் ஜயமஹா ஆகியோர் லெப்டினன்ட் கேணல் ஏபிஎஸ் அத்துகோரலவின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கியிருந்த நிதி உதவிகளை கொண்டு, 64 ஆவது படைப்பிரிவின் 642 ஆவது பிரிகேடின் 23 விஜயபாகு காலாட் படையணியினரால் மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய மணவாளன்பட்டமுறிப்பு பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கான குடிநீர் திட்டம் வழங்கப்பட்டதோடு, “சத்தியசாயி” அமைப்பின் தொண்டு பணிகளின் கீழ் உயர் கல்வி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சம்மளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சின்னத்தம்பிப் பாடசாலை மற்றும் ஈஸ்வரன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 330 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு 642 பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

642 வது பிரிகேட் தளபதி கேணல் ஜி.டி.எஸ்.எம் அல்விஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 23 விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி அவர்களினால் சிப்பாய்களின் உதவியுடம் மேற்படித் சமூகத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக் குடிநீர் திட்டத்தால் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், 64 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 642 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.