19th December 2021 13:55:32 Hours
முல்லைத்தீவு 68 வது படைப்பிரிவின் படையினர் வியாழக்கிழமை (9) மத அனுஷ்டானங்களின் பின்னர் தமது 12 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினர். படைப்பிரிவு வளாகத்தினுள் இடம்பெற்ற விசேட போதி பூஜை மற்றும் வற்றாப்பளை இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட இந்து பூஜைகளின் போது படைப்பிரிவினர் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.
ஆண்டு நிறைவு விழா தினமான (10) ஆம் திகதி 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டாரவிற்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
படைப்பிரிவு தளபதி நிகழ்வின் நினைவம்சமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதோடு, சிப்பாய்களுக்கான விருந்தகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்டு படையினருக்கான உரையொன்றை நிகழ்த்திய பின்னர் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் பங்குபற்றினார்.