Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2021 13:50:32 Hours

நன்கொடையாளர்களின் ஆதரவுடன் 8 வது இலங்கை சிங்க படையணியினரால் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு உதவி

8 வது இலங்கை இராணுவச் சிங்கப்படையின் 29 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மனிநேய திட்டங்களின் தொடர்ச்சியாக, ஜப்பானிய (டோக்கியோ வெப்) நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியில், கேகாலையில் உள்ள "ஸ்ரீ போதிராஜா சிறுவர் கிராமம்" மற்றும் பெரகலையில் உள்ள புனித ஜோன்ஸ் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கான கனிணி உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைக்கப்பில் ஜபானிய டோக்கியோ வெப் (Japanese School of Tokyo Web) வழங்கிய நிதி உதவியை கொண்டு மடிக்கணினிகள், திரைகளுடன் கூடிய பல்லூடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உதவும் கற்றல் உபகரணங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பயிற்சி புத்தகங்கள், கருவிப்பெட்டிகள், எழுதுவினைப் பொருட்கள், பேனாக்கள் மற்றும் பென்சில்கள் போன்றன 611 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.ஏ.ஜே.எல்.பி உடோவிட்ட மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி.சி.எஸ்.கே. அத்துகோரள ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.