Header

Sri Lanka Army

Defenders of the Nation

17th December 2021 16:21:37 Hours

"உங்கள் வெளிப்பாடுகள் உங்களுக்காக செலவழித்த ஒவ்வொரு சதத்தையும் நியாயப்படுத்த வேண்டும்", அதிகாரிகளுக்கான தொழில் மேம்பாட்டு கல்லூரியை இராணுவ போர் பாடசாலையாக மாற்றியமைக்கும் நிகழ்வில் தளபதி உரை

இலங்கை இராணுவ கல்விச் செயற்பாடுகளில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கும் முகமாகவும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை மாற்றங்களுடன் இணங்கிச் செயற்படும் வகையில் பாதுகாப்பு துறைசார் ஆராய்ச்சியில் ஈடுபடும் வல்லமை கொண்ட அதிகாரிகளை உருவாக்குதல், சிக்கலுக்கு சரியான முறையில் தீர்வுக்காண கூடிய மற்றும் உலகளாவிய மாற்றங்களுடன் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடியவர்களையும் உருவாக்கும் நோக்கிலும் புத்தளையிலுள்ள அதிகாரிகளுக்கான தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரி வெள்ளிக்கிழமை (17 டிசம்பர் 2021) முதல் இராணுவ போர் பாடசாலையாக மாற்றியமைக்கப்ட்டுள்ளது.

இராணுவத்தின் “2020-2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல்” என்ற எண்ணக்கருவை முன்வைத்தவர் என்ற வகையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களே இத்திட்டத்தின் பின்னணியிலிருக்கும் முன்னோடியா செயற்பட்டார். அதேநேரம் மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்கான இன்று (17) ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பாடசாலை வளாகத்திற்கு வருகை தந்த வேளையில் அவருக்கு இலங்கை இராணுவ கவசப் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு தளபதியவர்களின் வாகன தொடரணிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனையடுத்து புதிய இராணுவ போர் பாடசாலையின் தளபதியவர்களின் அழைப்பிற்கமைய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மற்றும் சிவில் பிரதானிகள், ஆகியோருடன் இணைந்து “இராணுவ போர் பாடசாலையின்” பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றல், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் இராணுவ கீதம் இசைத்த பின்னர் இராணுவ போர் பாடசாலை தொடர்பிலான குறும்படம் ஒன்றை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது. இதுவரை அதிகாரிகளின் தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரியாக செயற்பட்டு வந்த தற்போதைய இராணுவ போர் பாடசாலை புதிய நோக்குகள், உயர்தர தொழில்முறைக்கான இராணுவக் கல்வி, ஆராய்ச்சி நடத்துதல், வெளியிடுதல், துரித மற்றும் விறுவிறுப்பான போர் செயன்முறைகளில் ஈடுபடுதல் , மீளாய்வுச் செயற்பாடுகள், பட்டப்படிப்புக்கள் மூலம் மூலோபாய திட்டமிடல்களை வகுக்கும் திறன்மிக்க தலைமைத்துவங்களை உருவாக்ககூடிய இயலுமைகளை கொண்டமைந்திருக்கிறது.

புதிய இராணுவ போர் பாடசாலையின் நோக்கு மற்றும் அதன் எதிர்கால பணிகள் தொடர்பிலான விடயங்களுடன் வரவேற்புரை நிகழ்த்திய பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்களின் அழைப்பின் பேரில் தளபதியவர்களால் பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதிகாரிகளுக்கான தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரி 2021 ஆம் ஆண்டில் இராணுவ போர் பாடசாலையாக மாற்றம் பெற்றமை வரையிலான வளர்ச்சி பாதையில் தளபதியவர்களின் ஊக்குவிப்புக்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தன. அதேபோல் இந்த வளர்ச்சியானது இன்றை பாதுகாப்புச் சூழலில் இராணுவத்தின் வகிபாகம் மற்றும் அதன் மீதான எதிர்பார்ப்புக்கள் உயர்வான வகையில் அமைந்திருக்கின்ற அதேவேளையில் உள்நாட்டிலும் உலக அளவிலும் எதிர்பார்க்கப்படும் அறிவு, திறன் மற்றும் தகைமைகளை கொண்டவர்களாக உருவாக்கும் இயலுமை கொண்டவர்களை உருவாக்கும் திறனை கொண்டுள்ளமையை வெளிகாட்டுகிறது.

இந்நிகழ்வின் போது சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட கட்டளை அதிகாரிகளுக்கான கற்றை நெறிகளை நிறைவு செய்த முதல் மூன்று அதிகாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இராணுவ போர் பாடசாலையின் நிகழ்வில் பிரதம அதிதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கம் நிகழ்வுகளில் பங்குபற்றிய தளபதி பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்த பின்னர் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

அதனை தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் நீண்ட கால தேவையாக காணப்பட்ட பாடசாலையின் மாதிரி வடிவமைப்பு திட்டமிடல்களை கொண்ட அறையின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து திறந்து வைத்த தளபதியவர்கள், சிரேஷ்ட அதிகாரிகளுடன் அறையை மேற்பார்வை செய்தார். பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவ போர் பாடசாலைக்கு மேற்கொண்ட இந்த விஜயத்தின் போது அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு பயிலிளவல் அதிகாரிகளுக்கும் கிடைத்திருந்தது. அதனையடுத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தளபதியவர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பணிகள் தொடர்பில் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரியின் முன்னாள் தளபதிகள், முன்னைய அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரியை சர்வதேச தரம் வாய்ந்ததாக மேம்படுத்தியவர்களில் முக்கிய பங்கு வகித்தவரான (ஓய்வு) மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர, மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் நிபுணர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

23 ஜனவரி 2012 முதல் நட்பு நாடுகளின் 44 அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உள்ளடங்களாக மொத்தமாக 2148 அதிகாரிகள் தொழிற் தகைமை பட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி கல்லூரியானது முப்படை மற்றும் சிவில் துறையில் காணப்படும் தொழில் துறைகளின் அவசியங்களுக்கேற்பவும் இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலுமான அதிகாரிகளை உருவாக்குவதோடு, அரச துறையில் நிர்வாக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கான தொலைநோக்கு தெரிவுகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த இக்கல்லூரி இனிவரும் நாட்களில் புதிய இராணுவ போர் பாடசாலையாக நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றம் பெறக்கூடிய மூலோபாய திட்டமிடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் அக்கறை செலுத்துவதாக அமைந்துள்ளது. “மீளமைப்புச் செய்யப்பட்ட இராணுவ போர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் இராணுவ தளபதி ஆற்றிய உரை"

"உங்களுக்குத் தெரியும், தேவையான உட்கட்டமைப்பு, பயிற்சி வசதிகள், பாடத்திட்டங்கள், அத்துடன் கற்றல் திட்டங்கள் அதிகாரிகளுக்கு சிறந்தவற்றை கொடுக்கும் நோக்கில் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களின் தொகுக்கப்பட்டுள்ளவையாகும். இராணுவப் பயிற்சியிகளுக்காக முதலீடு செய்யவும் இராணுவத்தின் தரத்தை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதற்கும் மேலும் நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். இராணுவக் கல்வி என்பது ஓர் அதிகாரியின் வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும். அதன்படி அதிமேதகு ஜனாபதியவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்திற்கு இணையானதாக இராணுவத்தின் செயற்பாடுகளை கட்டமைக்கும் நோக்கில் முன்னெடுக்க முன்மொழியப்பட்ட “2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல்” இற்கு அமைய அதிகாரிகளுக்கான தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரியாக செயற்பட்டு வந்த கல்லூரி மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சூழல் என்பது அவ்வப்போது மாற்றம் காணப்படக்கூடியதாகும் அதனால் மாணவ அதிகாரிகளான நீங்கள் அது பற்றிய தெரிவுகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். எவ்வாறாயினும் தற்காலத்தில் பாதுகாப்பு சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றமானது முன்னைய காலங்களில் இராணுவம் எதிர்கொண்ட சவால்களிலிருந்து வேறுபடுவதோடு தொற்று நோய் உள்ளிட்ட சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய பரந்த அளவிலான பாதுகாப்பு சூழல் உருவாகியுள்ளதால் அதற்கும் முகம்கொடுக்க நேரிடும் என்பதை நினைவூட்டுகிறேன். எதிர்காலத்தில் இவ்வாறான சவால்கள் மேலும் வலுவடையக்கூடும்.

இலங்கை இராணுவமானது எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுக்க தயாராக இருக்கின்ற அதேநேரம் நெகிழ்வு தன்மையுடன் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப விடுக்கப்படும் கோரிக்கைகளையும் ஈடு செய்ய கூடிய வகையில் அமைந்துள்ளது. அதேபோல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் நம்பகமான பிரதிபலிப்புக்களை வழங்ககூடிய அமைப்பு என்ற வகையில் ஜனாதிபதியும், அரச தரப்பினரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் நாட்டு மக்களும் அச்சுறுத்தல்களிலிருந்து மக்களை இராணுவம் பாதுகாக்குமென அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உடல் ரீதியாகவும், கடமை அடிப்படையிலும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் இராணுவ கல்வி முறைமை தொடர்பில் கருத்துரைப்பது பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.

இராணுவத்தின் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்களாகவும் முகாமைத்துவம் செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கின்றமையால் மன அழுத்தங்கள் உடல் சோர்வு உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு எல்லா சூழ்நிலைகளிலும் முன்னிலையிலிருந்து வழிநடத்த கூடியவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்பதோடு, அடிக்கடி மாற்றம் காணும் சூழல்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் பல்துறைசார் திறன்களை கொண்டர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே, அதிகாரிகளின் பண்பு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதே அதிகாரிகளுக்கான பயிற்சிகளின் நோக்கமாகும். அதற்கமைய தேவையான அறிவு, நம்பிக்கை, கடமை, பொறுப்புணர்வு, ஊக்குவிப்பு உள்ளிட்ட பண்புகளுடன் அதிகாரிகள் அனைத்து நிலைகளிலும் பொறுப்புகளை ஏற்ககூடியவர்களாக இருப்பது அவசியமாகும். எனவே, பல்வேறு துறைகள் தொடர்பிலும், புதுப்பிக்கப்பட்ட மற்றும் அத்தியாவசியமான தெரிவுகளை அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு பயிற்றுனர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த பயிற்சிகள் அனைத்தும் கடுமையானதாக உள்ளதென கருதலாம். ஆனால் கடுமையான சூழ்நிலைகளிலும் சிறந்த தீர்மானங்களை எடுக்கும் வல்லமை கொண்டவர்களாக அதிகாரிகள் தம்மை வடிவமைத்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதேபோல, பயிற்சியின் போதான உங்களின் விடாமுயற்சி மற்றும் கவனம் ஆகியவை துறைசார் பொறுப்புகள் உங்களது கைகளுக்கு வருகின்ற போது, நேர்மை மற்றும் சுய திருப்தியுடன் சேவை செய்ய உதவும். மத்திய தர நிலை அதிகாரிகள், கட்டளை செயல்பாடுகள், பணியாளர்கள் செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல் செயல்முறைகளின் திறன்களை கொண்டிருப்பதும் அவசியமாகும். காரணம், மத்திய தர நிலை அதிகாரிகளே ஸ்தாபனத்தின் தளபதிகள், 2 தர நிலை ஊழியர்கள் அதிகாரிகள் அல்லது பயிற்றுனர்களாக செயல்படுகிறார்கள். மேலும் அவர்களின் விவேகமான செயற்பாடுகளும் மூலோபாய செயற்பாடுகளும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு அளப்பரியதாக அமைந்திருந்து.

எனவே, இன்றைய சூழலில் திறம்பட செயற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில், மூலோபாய திட்டமிடல் மற்றும் அவற்றை செயற்படுத்தும் பணிகளுக்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதோடு, மத்திய தர நிலை அதிகாரிகள் அந்த நிலையிலிருந்துகட்டளைகள், அவற்றை செயற்படுத்துதல் மற்றும் பணியாளர் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும். இலங்கை இராணுவத்தின் மத்திய தர அதிகாரிகள் மூலோபாய மற்றும் செயற்பாட்டு துறைக்குள் பிரவேசிப்பதன் மூலம், பாதுகாப்புச் சூழலில் பல வகையான மாற்றங்கள் மற்றும் திட்டமிடல்கள் மேற்கொள்வதற்கும் உகந்த தருணமாக தற்போதைய கற்றல் செயற்பாடுகளை பயன்படுத்திகொள்ள முடியும்.

எனவே, இலங்கை இராணுவத்தில் பயன்படுத்தப்படும் இராணுவக் கோட்பாடுகள், தந்திரோபாயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்கும், விளக்குவதற்கும், பயன்படுத்துவதற்கும், பரீட்சிப்பதற்கும், அவை தொடர்பாக கேள்விகளை எழுப்புவதற்கும், புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குமான திறன்களை பெற்றுகொடுக்கும் வகையிலேயே கனிஷ்ட அதிகாரிகளுக்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இக்காலப்பகுதியில் நீங்கள் எதிர்கொள்ளும் கடினமாக சூழ்நிலைகள் உங்களது தொழில்முறை வாழ்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

சிரேஷ்ட கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி

அதேபோல் இராணுவ சிப்பாய்கள் ஸ்தாபனத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவரும் நிலையில் அவர்களின் தளபதிகளாக இருப்பவர்களும் திறன்மிக்கவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனது வருங்கால படைப்பிரிவுத் தளபதிகள் அறிவுள்ள, திறமையான மற்றும் நம்பகமான அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், எதிர்கால தளபதிகள் சட்டரீதியாகவே எந்த முயற்சிகளிலும் ஈடுபடுவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவோராகவும் இருப்பது அவசியமானதாகும். அதனால் கட்டளை அதிகாரிகள் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பிலான அறிவுத்திறமை மேம்படுத்திக்கொள்வதும் அவசியமாகும்.

சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி பெரும்பாலான அதிகாரிகள் விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது முன்னிலையிலிருந்து கடமையாற்றியவர்கள் மற்றும் போருக்குப் பின்னர் மேலும் 11 வருடங்களை நிறைவு செய்தவர்கள் என்பதையும் நான் அறிவேன். இவர்கள் கடமைகள் காரணமாக இராணுவ உயர் கல்வியைத் தவறவிட்ட அதிகாரிகளாகவும் இருக்கலாம். அதனால் இந்த பாடநெறியானது கடந்த காலங்களில் கட்டளையிடும் செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் இருந்தவர்களுக்கு கட்டளையிடும் பணிகளுக்கு வழிகாட்டல், தலைமைத்துவ ஆற்றல் மிக்கவர்களை வெளிகொண்டு வருதல், கட்டளையிடுவதற்கு தகுதியான அதிகாரிகளை உருவாக்குதல் உள்ளிட்ட காரணங்களுக்கும் உதவியாக அமையும்.

அடுத்ததாக இராணுவத்தின் பண்புகள், விமர்சனம் மற்றும் புத்தாக்க சிந்தனை, பயனுள்ள முன்மொழிவுகள் மற்றும் எழுத்தறிவு, மூலோபாய திட்டமிடல் பண்புகள் மற்றும் கீழ்நிலை பணியாளர்கள் மற்றும் சகாக்களுக்கும் உண்மையான மரியாதை வழங்குதல் போன்ற நாளைய தலைமைத்துவங்களுக்கு அவசியமான திறன்களை வழங்குவதற்கும் பாடநெறி உதவியாக அமைந்திருக்கும் அதனால் இந்த பாடநெறியினூடாக சிறந்த தலைவர்களாக இருப்பதற்கான திறன்களை பெற்றுக்கொள்வீர்கள் என்றும் தெரிவித்தார்.

பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பணிப்பு பணியாளர்கள். உங்கள் சாதனைப் பதிவுகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் இராணுவத்தின் கற்றலை வளர்ப்பதற்கும் தரத்தை உயர்த்துவதற்கும் உங்கள் இடைவிடாத முயற்சியைப் பாராட்டுகிறேன். அதிகாரிகளின் வளர்ச்சிக்காக நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு தெரிவுகளை பெற்றுக்கொடுக்கிறீர்கள் என்பதோடு கற்றலுக்கு அவர்களை ஊக்குவிக்கும் உங்கள் திறனைப் பற்றி நான் நினைவூட்டுகிறேன். எனவே, நீங்கள் பாதுகாப்புச் சூழலின் நவீன மேம்பாட்டுடன் இணைந்திருக்கவும், மேம்படுத்தப்பட்ட கற்றலுக்கு அதிகாரிகளை ஊக்குவிக்கவும் நடைமுறைச் செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் வடிவமைப்பது அவசியமாகும்.

உணர்வுகள், அணுகுமுறைகள் மற்றும் அறிவுசார் சவால்களுக்கான பதில்களைத் வழங்கவும், சுய-கற்றல் பழக்கங்களைத் தூண்டவும், யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், பாடநெறிகளின் போது அமர்வுகளில் பங்கேற்பதற்கான நம்பிக்கையை வளர்க்கவும் மாணவ அதிகாரிகளுக்கு உதவுமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். அதேநேரத்தில் உங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன், மேலும் எதிர்காலத்திலும் நீங்கள் இதே உணர்வுடன் செயற்பட வேண்டும்.

இராணுவத்தில் அதிகாரிகளின் கல்வியும் பயிற்சியும் இன்றைய பாதுகாப்புச் சூழலுக்கமைவாக அதிகாரிகளை வளர்ப்பதற்காக அர்பணிப்புக்களை செய்ய அவசியமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக பெருமளவு பணத்தை நாடு செலவிடுகிறது. அதனால் கல்விறை உறுதி செய்வதற்கான உங்களுக்காக செலவு செய்யப்பட்ட ஒவ்வொரு சதத்திற்கும் நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு உங்களை சார்ந்துள்ளது. அதனால் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ள வழங்கல், வசதிகள் என்பவற்றை உங்களை மேம்படுத்திகொள்வதற்காக நீங்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

இறுதியாக, தளபதி, தலைமைப் பயிற்றுவிப்பாளர், பணிப்பக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோர் உள்ளடங்களாக இராணுவப் போர் பாடசாலையின் அதிகாரிகளது தொழில்முறைமைகளை சீர்படுத்துவதற்காக திரைக்கு பின்னாளிலிருந்து செயற்படுவோருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு எதிர்கால முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை ஈட்டித்தருவதாக அமையட்டும் எனவும் வாழ்தினார்.