20th December 2021 06:10:02 Hours
தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பயிலிளவல் அதிகாரிகள் இராணுவத்தின் 2 வது லெப்டினன் அதிகாரிகளாக ஜனாதிபதியவர்களிடமிருந்து அதிகாரவாணை பெற்றுகொண்டதன் பின்னர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அவர்களுக்கான நிலைச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டது.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அதிகாரிகளின் எதிர்கால பணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தில் அவர்களுக்குரிய படையணிகளில் இணைக்கப்படுவதற்கு முன்னதாக பெற்றோர்களுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட தருணம் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. இம்முறையானது இலங்கை இராணுவ கல்வியற் கல்லுரியில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழமையாகும்.
அதனையடுத்து உரையொன்றினை நிகழ்த்திய பிரதம அதிதியவர்கள் சிவில் நபரொருவர் இராணுவ அதிகாரியாக மாற்றப்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எடுத்துரைத்தார். தேசிய மற்றும் நிறுவனம் சார்ந்த இலக்குகளை அடைவதாக உறுதிமொழி எடுத்துகொண்டதன் பின்னர் தனக்கு கீழ் பணிபுரிவோரை சரியான முறையில் வழிநடத்த வேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
உங்கள் செயற்பாடுகளின் தரம் மற்றும் சமத்துவம், நோக்கம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அதிக அளவு பொறுமை மற்றும் இரக்கம் மற்றும் வெளிப்பாட்டுடன் மற்றவர்களின் தேவைகளைக் செவிமடுக்க நீங்கள் சிறந்த மனப்பாங்கை கொண்டிருக்க வேண்டும். உங்கள் தொழில்முறை வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் காணும் போது எந்த அழுத்தங்களையும் உள்வாங்கும் திறன் கொண்டவராக நீங்கள் தன்னம்பிக்கையுடன் தனித்து நிற்க வேண்டுமென புதிய அதிகாரிகளுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா ஆலோசணை வழங்கினார்.
அன்றைய நிகழ்வுகள் இரு மணி நேரங்கள் கண் கவர் அம்சங்களுடன் கூடியதாக நீடித்திருந்ததோடு, சிரேஷ்ட அதிகாரிகள் நினைவுச் சின்னங்களை பரிமாற்றிக் கொண்டதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து விழா நிறைவுக்கு வந்தது.