Header

Sri Lanka Army

Defender of the Nation

18th December 2021 05:52:44 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு தலைமைத்துவ செயலமர்வு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் வழிகாட்டலுக்கமைய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வொன்று பாணந்துறை பார்ன்ங் ஹவுஸ் ( Barns House) இல் செவ்வாய்கிழமை (14)நடைபெற்றது.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 21 படையலகுகள் தங்களது கட்டளை அதிகாரிகள், குழு கட்டளை அதிகாரிகள், படையணி சாஜண்ட் மேஜர்கள், குழு சாஜண்ட்கள், அணி கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஆகியோர் மேற்படி அமர்வில் கலந்துகொண்டனர்.

மேற்படி செயலமர்வு சிறப்பு படையணியின் இராண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்என்எம்கேபீ செனவிரத்ன மற்றும் பிரிகேடியர் டீசீஎல் கணேபொல ஆகியோரால் நடாத்தப்பட்டது. மேலும் பணி நிலை அதிகாரி 1 பரீட்சை மற்றும் உதவிகள் லெப்டினண் கேணல் கேபீடீசீ விஜேவர்தனவும் கலந்துகொண்டார்.