19th December 2021 12:48:32 Hours
இலங்கை சிங்கப் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் பனாகொடையிலுள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக வியாழக்கிழமை (16) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்ற மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு பணி நிலை அதிகாரிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து சிப்பாய்களால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து நிகழ்வின் நினைவம்சமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த புதிய தளபதியவர்கள் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சிப்பாய்களுக்கான விருந்தகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்டதுடன் படையினருக்கான உரையையும் ஆற்றினார். 61 வது படைப்பிரிவு தளபதி, பணிப்பாளர்கள், நிலையத் தளபதிகள், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
மேற்படி நியமனத்தினை பெற்றுகொள்வதற்கு முன்னதாக குண்டசாலையிலுள்ள 11 வது படைப்பிரிவின் தளபதியாக நியமனம் வகித்ததோடு தற்போது சிங்கப் படையணியின் படைத் தளபதியாக நியமனம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.