Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2021 12:37:43 Hours

11 படைப்பிரிவு தளபதியாக மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அலுவலக கடமைகளை பொறுப்பேற்றார்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக விஜயபாகு காலாட் படையின் மேஜர் ஜெனரல் பீஎஸ் கல்ப சஞ்சீவ அவர்கள் வியாழக்கிழமை (16) கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.

புதிய தளபதி படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த வேளையில் 10 வது கஜபா படையணியினரால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனையடுத்து மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்கள் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனையடுத்து படைப்பிரிவின் படையினர்களுக்கான உரையொன்றை நிகழத்திய தளபதி தனது பணி நோக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைக தளபதியாக பதவியேற்றமையையடுத்து மேற்படி புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.