Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2021 17:47:39 Hours

3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் புதிய பிரிவு மற்றும் உணவகம் திறந்து வைப்பு

பலாலியில் அமைந்துள்ள 3வது இலங்கை சமிக்ஞைப் படையணி, வளாகத்தில் நவீன கால சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பல திறன் வாய்ந்த வீரர்களை உருவாக்கும் நோக்கில் புதிய அம்சங்களுடனான பயிற்சி களம் ஔ்றும் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜெண்ட்களுக்கான புதிய உணவக வசதிகளும் வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

3 இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எச்ஏடீடபிள்யூ ஹெட்டியாராச்சியின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவ தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் தலைமையில் மேற்படி இரு புதிய அம்சங்களும் திறந்து வைக்கப்பட்டன.

60 பேர் அமரக்கூடிய வகையில் காணப்படும் புதிய பயிற்சிப் பிரிவானது, அதி நவீன ஒலி ,காட்சி கருவிகள் மற்றும் பிற வசதிகள் நிறுவப்பட்டுள்ளது. இது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மேலதிகமாக குடாநாட்டிலிருக்கும் முகாமொன்றுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கேட்போர்கூடமாகும்.

அதேபோன்று, 3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜெண்ட்களுக்கான புதிய உணவக கட்டிடம் விசாலமான வரவேற்பு பகுதி மற்றும் அறை வசதிகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.

3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி அவர்களினால் மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் மற்றும் பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேக ஆகியோருக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இதன்போது பிரதம விருந்தினரால் வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியின் அடிவாரத்தில் மலர் மாலை சூட்டி போரில் உயிர் நீத்த இலங்கை சமிக்ஞை படையின் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து கட்டிடத்தின் பெயர் பலகையை திறை நீக்கம் செய்து வைத்த பிரதம விருந்தினர் ரிபன்களையும் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அடுத்ததாக தனது வருகையினை நினைவம்சமாக மரக்கன்று ஒன்றை நாட்டிவைத்த அவர், சிப்பாய்களுக்கான உரையொன்றை நிகழ்த்திய பின்னர் இன்றளவில் கடல், நிலம், வான் ஆகியவற்றுக்கு மாறாக போர்களில் 5வது களமாக தற்போது கருதப்படும் சைபர் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன.