Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2021 10:57:57 Hours

நெலும் பொக்குன கலையரங்கில் இடம்பெற்ற ‘ வர்ண இரவு’ நிகழ்வில் வெற்றியாளர்களுக்கு அங்கிகாரம்

இலங்கை பீரங்கி படையணியின் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ' வர்ண இரவு' விருது வழங்கும் விழா, இன்று (12) மாலை கொழும்பு நெலும் பொகுன கலையரங்கில் அரங்கேறியது. இதன்போது இராணுவ வீரர்களின் தனித்துவமான விளையாட்டுத் திறன்களை அங்கீகரிக்கும் வகையில் விளையாட்டுகளில் சிறந்த பெருபேறுகளை வெளிப்படுத்தியவர்கள் பாராட்டப்பட்டனர்.

இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கிப் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டமை பங்கேற்பாளர்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்திருந்தது.

கடந்த வருடங்களில் இராணுவத்திற்காக சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கிய இலங்கை பிரங்கி படையானது, இந்த விழாவின் போது ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்புகளைப் பாராட்டுவதில் பெருமையடைகிறது.

நிகழ்வின் பிரதம அதிதியான ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தளபதி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் கலையரங்கு நுழைவாயிலை வந்தடைந்த போது, இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கிப் படையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு கண்டிய நடனக் கலைஞர்களின் நடனத்துடன் சிரேஸ்ட அதிகாரிகளால் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனையடுத்து மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு பீரங்கிப் படையின் கீதம் இசைக்கப்பட்டதோடு, நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு இரு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

பீரங்கி படையின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்கள் வரவேற்புரையை வழங்கியதையடுத்து இந்த நிகழ்வு ஆரம்பமானது. சேவையிலுள்ள மற்றும் ஓய்வுபெற்ற 248 இலங்கை பீரங்கி படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு விருதுகளை வழங்கி வைக்கின்ற வேளைகளில் இடையிடையே கலாசார அம்சங்களுடன் கூடிய வண்ணமயமான நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. இதன்போது இராணுவம், பாதுகாப்பு சேவைகளிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச களங்களில் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களும் இதன்போது பாராட்டப்பட்டனர்.

கடந்த சில வருடங்களில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச மட்டத்தில் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய இலங்கை பீரங்கி படையின் வீரர்களுக்கு முதல் கட்டமாக விருது வழங்குவதற்காக, பிரதம அதிதிக்கு மேடைக்கு அழபை்பு விடுக்கப்பட்டதோடு, அன்றைய பிரதம அதிதியால் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான சவாலான சாதனைகளை அங்கீகரிப்பதையும் எடுத்துக்கூறும் வகையிலான உரையுடனும் நிகழ்வு நிறைவு கண்டது.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராணுவத் தளபதியவர்கள் புறப்படுவதற்கு முன்னர், பீரங்கிப் படையின் தளபதியவர்களால் சிறப்பு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் இலங்கை பீரங்கிப் படை சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாமினி கொடுவேகொட அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வின் அடுத்த அம்சமாக முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் இலங்கை பீரங்கி படையின் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பீரங்கிப் படையின் சாதனையாளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.