Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2021 00:27:07 Hours

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவட் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிப்பு

மறைந்த இந்திய பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத் ஆகியோரின் இராணுவ இறுதிச் சடங்குகள் இன்று (10) பிற்பகல் டில்லியில் உள்ள தௌலா குவானில் உள்ள பிரார் மயானத்தில், அமைச்சர்கள், பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதர்கள் மத்தியில் முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள், இந்திய அரசாங்க அதிகாரிகள், இந்திய இராணுவ கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், குடும்பத்தினர் மற்றும் ஏனையோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் உயிர்நீத்த இந்திய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக புதுடில்லிக்கு இன்று (10) காலை சென்றிருந்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் உண்மையுள்ள தோழரும் சிறந்த தலைமைத்துவ பண்புடையவருமான ஜெனரல் பிபின் ராவட் அவர்கள் இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவரை இழந்த துயரில் வாடும் குடும்பத்தின் உறுப்பினர்களை நேரில் சந்தித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். அதேநேரம், மேலும் செய்தியை அறிந்துகொண்ட குறுகிய நேரத்திற்குள் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்த ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு ஜெனரல் பிபின் ராவட் அவர்களின் மகள்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

அதே இடத்தில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்களும் குறுகிய நேரத்திற்குள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதோடு மற்றும் ஒரு சிறந்த இராணுவத் தளபதியொருவரை இழந்துவிட்டதையிட்டு துயரச் செய்திகளை பரிமாறிக்கொண்டனர்.

முழுமையான இராணுவ மரியாதையுடன் இறுதி ஊர்வலத்தின் போது இந்திய இராணுவ இசைக்குழு வீரர்களின் இசையுடன் மறைந்த 1 வது இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவட் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 17 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதேநேரம், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் இராணுவத் தளபதிகள் இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை தளபதியுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் விபத்தில் உயிர் நீத்த செய்தியை அறிந்துகொண்டதை தொடர்ந்து அவரது அனுதாபச் இரங்கல் வெளியிட்டிருந்தார்.

இலங்கை இராணுவத்தின் உண்மையுள்ள நண்பராகவும், இராணுவ தெரிவு, தலைமைத்துவம், தூரநோக்கு மற்றும் நற்புறவுடன் சேவையாற்றுவது அவருடைய பண்புகளாகும். தொழிசார்ந்த புதியதொரு யுகத்தை தோற்றுவிப்பதற்கும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்ற சூழ்நிலைக்கு மத்தியிலும் எழுகின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்திருந்த அதேவேளையில் அவருக்கு கீழ் பணியாற்றும் படையினருக்கும் ஊக்குவிப்பையும் வழங்கியிருந்தார்.வெள்ளிக்கிழமை (10) முற்பகல் 11.00 மணிக்கு, ஜெனரல் ராவட் மற்றும் அவரது பாரியார் மதுலிகாவின் அவர்களின் உடல்கள் அவர்களது அலுவலக இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன, பிற்பகல் 2.00 மணிக்கு இராணுவ இறுதிச் சடங்குகள் முப்படைகளின் இராணுவ இசைக்குழுக்களின் மரியாதையுடன் தௌலா குவானில் உள்ள பிராரில் தகனம் செய்யப்பட்டன.

இந்தியாவின் முதல் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி, திருமதி மதுலிகா ராவத் மற்றும் சில அதிகாரிகள், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் ஒரு முறையான விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்தனர், தமிழ்நாடு மாநிலம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் புதன்கிழமை (8) மதியம் விபத்துக்குள்ளானார்கள். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள் உள்ளிட்ட பலர் மறைந்த ஜெனரல் பிபின் ராவட்டுக்கு அஞ்சலி செலுத்தினர்.